நடிகர் அஜித் துணிவு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே தன்னுடைய புதிய படத்திற்கான கூட்டணியை முடிவு செய்தார், அந்த வகையில் விஸ்வாசம் படத்தில் தனக்கு ஜோடியாக நயன்தாரா நடித்த போது அஜித் – நயன்தாரா இருவருக்கும் ஒரு நட்பு இருந்து வந்துள்ளது, அதன் அடிப்படையில் நயன்தாரா சிபாரிசில் அஜித்திடம் பேசி அவருடைய புதிய படத்தில் விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பை பெற்று தந்தார் நயன்தாரா.
இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் அஜித் நடிக்கும் படத்தை தயாரிப்பதற்கான வாய்ப்பு லைக்கா நிறுவனத்திற்கு கிடைத்தது. அஜித்திடம் கால் சீட் கிடைத்தால் போதும் என்கின்ற ஒரு நிலையில் இருந்த லைக்கா நிறுவனம், அஜித் நடிக்கும் புதிய படத்தின் கதையை கூட முன்கூட்டியே கேட்கவில்லை. இதனை தொடர்ந்து துணிவு படம் முடிந்ததும், புதிய படத்தை தொடங்க திட்டமிட்ட லைக்கா மற்றும் அஜித்.
புதிய படத்திற்கான கதை, திரைக்கதை, லொகேஷன் மற்றும் மற்ற நடிகர்கள் தேர்வுகளை ஏற்பாடு செய்து தயாராக இருக்கும்படி விக்னேஷ் சிவனுக்கு அறிவுறுத்தப்பட்டனர். இதற்காக 8 மாதம் கால அவகாசம் விக்னேஷ் சிவனுக்கு கொடுக்கப்பட்டது.இந்நிலையில் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு சில நாட்களே இருந்த நிலையில் விக்னேஷ் சிவனை நேரில் அழைத்த அஜித் படத்தின் கதையை கேட்டுள்ளார்.
கதையை கேட்ட அஜித் டென்ஷனில், இது என்ன கதை என தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி விக்னேஷ் சிவனை அனுப்பி வைத்துள்ளார். மேலும் உடனே லண்டனில் உள்ள லைக்கா நிறுவனத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அஜித், படத்தின் கதை தனக்கு பிடிக்க வில்லை, நீங்களும் ஒரு தடவை கேட்டுப் பாருங்கள். இயக்குனரை மாற்றினால் என்னுடைய கால்ஷீட் கிடைக்குமா.? கிடைக்காதா? என்பது பற்றி எல்லாம் யோசிக்காதீர்கள் நிச்சயம் உங்களுக்கு ஒரு படத்திற்கான கால் சீட் கொடுப்பேன்.
கதை, இயக்குனர் தேர்வில் உங்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கிறேன் என தெரிவித்த அஜித், என்னை நம்பி நீங்க முதலீடு செய்து படம் எடுக்க போகிறீர்கள், அதனால் உங்களுக்கு லாபத்தை ஈட்டு தரும் வகையில் கதை அமைய வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். ஆனால் விக்னேஷ் சிவன் தன்னிடம் சொன்ன கதையில் எனக்கு விருப்பமில்லை இருந்தாலும் நீங்களும் ஒரு தடவை கேட்டு பாருங்கள் என அஜித் லண்டனில் உள்ள லைக்கா நிறுவனத்திடம் பேசியுள்ளார்.
ஆனால் அஜித் தொலைபேசியில் பேசியது தெரியாமல், அஜித்துக்கு தெரியாமல் லண்டன் சென்று லைக்கா நிறுவனத்தை சந்தித்து கன்வின்ஸ் செய்து விடலாம் என சென்றுள்ளார் விக்னேஷ் சிவன், அங்கே அஜித் ஏற்கனவே தொலைபேசியில் பேசியதை வெளிப்படுத்தாத லைக்கா தரப்பு விக்னேஷ் சிவன் கதையை கேட்டு, இந்த குப்பை கதையை தயார் செய்ய உங்களுக்கு எட்டு மாதம் தேவையா.? இதுக்கு 200 கோடி பட்ஜெட் என அவர்களும் விக்னேஷ் சிவனிடம் கடுமையாக நடந்து கொண்டுள்ளார்கள்.
இதனை தொடர்ந்து அஜித் நடிக்கும் புதிய படத்தில் இருந்து வெளியேற்ற பட்ட விக்னேஷ் சிவன், தனக்கு நெருக்கமானவர்களிடம், கடந்த எட்டு மாதமாக கடுமையாக உழைத்து அருமையான கதையை தயார் செய்து வைத்திருந்தேன், ஆனால் கதை பிடிக்கவில்லை என தெரிவித்த அஜித், தயாரிப்பு நிறுவனத்திடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு போட்டு கொடுத்துவிட்டார், இப்படி அவரை நம்பி இருந்த என்னை ஏமாற்றி விட்டார் என புலம்பி வருகிறார் விக்னேஷ் சிவன் என கூறப்படுகிறது.