தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான அஜித் துணிவு படத்தையடுத்து, இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடா முயற்சி’ படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஒவ்வொரு முறையும் அஜித் நடிக்கும் படத்தின் அப்டேட் கேட்டுரசிகர்கள் சோஷியல் மீடியாவில் டிரென்ட் ஆக்கி விடுவார்கள்.
இவ்வாறு ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு விடாமுயற்சி படம் பற்றி ஒரு அப்டேட்டும் இப்போது வரை கிடைக்கவில்லை. இந்நிலையில், இன்னும் இரண்டே வாரங்களில் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அஜித் ரசிகர்களுக்கு ஒரு குட்டி அப்டேட் தான். இதற்கிடையில், நடிகர் அஜித் இயக்குனருக்கு எக்கச்சக்கமான கண்டீஷன் போட்டு நிறைய மாற்றங்களை செய்து வருகிறாராம்.
அவ்வாறு இருக்கையில், முதலில் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக அனைத்து ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்த த்ரிஷா நடிக்க உள்ளதாக கூறப்பட்டிருந்தது. ஏற்கனவே, இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் த்ரிஷா, அடுத்தடுத்து நிறைய படங்களுக்கு ஒப்பந்தாமகி வருகிறார்.
இதற்கிடையில், படத் தயாரிப்புக் குழு அஜித்துடன் ஜோடியாக நடிக்கவிருந்த திரிஷாவை மாற்றி விட்டு தமன்னாவை ‘ஓகே ‘ செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. திடீரென திரிஷாவை தூக்கி விட்டு தமன்னாவை ஒப்பந்தம் செய்யக் காரணம் என்னவென்றால், சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தில் ‘காவலா’ பாட்டுக்கு வெறித்தனமாக டான்ஸ் ஆடிய தமன்னாவின் மார்க்கெட் கிடுகிடுவென உயர்ந்துள்ளதால்,
தற்போது அஜித் படத்துக்கு அது உதவும் என்று படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, விடாமுயற்சியில் நடிப்பதற்கு நயன்தாரா வேண்டாம் என்று அஜித் கூறியதாகவும் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.