தற்பொழுது அஜித் ரசிகர்கள் பொது நிகழ்வுகளில் அஜித்தே கடவுள் என்று கூச்சப்படுவதை ட்ரெண்டிங் ஆக வைத்து வருகிறார்கள். அப்படி சமீபத்தில் நடந்த ஒரு மரத்தன் போட்டியில் கலந்து கொண்ட பெண்கள் அஜித்தே கடவுள் என்று சத்தமிட, அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டவர் கோபித்துக் கொண்டே வெளியே சென்று விட்டார்.
இதுபோன்று அஜித் ரசிகர்கள் அஜித் கடவுள் என்று கூச்சலிட்டு வருவது எந்த மனநிலையில் இவர்கள் இருக்கிறார்கள் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.இவர்களின் அஜித்தே கடவுள் கூச்சல் வெறுப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக சமீபத்தில் அல்லு அர்ஜுன் செய்த ஒரு தரமான சம்பவம் இந்த சம்பவத்திற்கு பின்பாவது அஜித்தை கடவுளாக தூக்கிக் கொண்டாடும் ரசிகர்கள் திருந்துவார்களா என்கின்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படத்தின் முதல் காட்சிக்கு ஒரு தாய் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் அழைத்து திரையரங்குகளுக்கு படம் பார்க்க வருகிறார். அதே திரையரங்குக்கு அல்லு அர்ஜுன் ரசிகர்களோடு ரசிகராக படம் பார்க்க வருகிறார். அல்லு அர்ஜுன் வந்த தகவல் அறிந்து திரையரங்குகளில் இருந்த கூட்டம் அல்லு அர்ஜுனனை நோக்கி ஓடுகிறது.
அந்தக் கூட்டத்தில் நசுங்கி இரண்டு குழந்தைகளை படத்திற்கு அழைத்து வந்த அந்த தாய் மரணம் அடைகிறார். காயங்களுடன் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறது. இப்படி ஒரு சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று கொண்ட அல்லு அர்ஜுன், ஒரு வீடியோ வெளியிட்டு வருத்தம் தெரிவித்தவர். அந்த குழந்தைகளின் முழு மருத்துவ செலவையும் தான் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.
மேலும் அந்த தாயை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார். அது மட்டும் அல்ல விரைவில் அந்த குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இப்படி ஒரு நல்ல மனிதரான அல்லு அர்ஜுன் நடிகராக இருக்கும் அதே சினிமா துறையில் அஜித் என்ன செய்திருக்கிறார் என்று பாருங்கள், இதன் பின்பும் அவரை கடவுளே என்று கூச்சலிடுகின்றவர்கள் திருந்துவார்களா.? என்கிற கேள்விக்கு விடை கிடைக்குமா என்று பார்க்கலாம்.
துணிவு படத்தின் ரிலீஸ் போது லாரியில் ஏறி ஆட்டம் போட்ட ரசிகர் மரணம் அடைகிறார். அந்த ரசிகன் யாருக்காக வந்தார், அஜித்க்காக வந்தார், அஜித் பட கொண்டாட்டத்தில் பங்கேற்று மரணம் அடைந்தார். ஆனால் அந்த இளைஞனையை மட்டும் நம்பி இருந்த குடும்பம் என்ன ஆனது என்று கொஞ்சமாவது அக்கறை இருந்திருந்தால், அஜித் அந்த உயிரிழந்த இளைஞனின் குடும்பத்திற்கு உதவி செய்திருப்பார்.
அந்த குடும்பத்திற்கு நேரடியாக உதவி செய்தால் இதுவே தவறான முன்னுதாரணமாகிவிடும் என்பதற்காக, அஜித் திரை மறைவில் நிச்சயம் அந்த குடும்பத்திற்கு உதவி செய்திருப்பார் என்று பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், இதுவரை அஜித் உயிர்விட்ட அஜித் ரசிகரின் அந்த குடும்பத்திற்கு அஜித் எதுவுமே செய்யவில்லை என்றும், அந்த சம்பவத்தை அத்துடன் கண்டு காணாமல் கடந்து விட்டார் அஜித் என்கின்ற தகவல் வெளியாகி உள்ளது.
இப்போது அஜித்தே கடவுளே என்று கூச்சலிடும் அஜித் ரசிகர்களே யார் கடவுள்.? தன்னுடைய படத்தை பார்க்க வந்து கூட்ட நெரிசியலில் மரணம் அடைந்த ஒரு பெண்ணின் குடும்பத்திற்கு 25 லட்சம் கொடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்திக்க இருக்கும் அல்லு அர்ஜுன் கடவுளா.? தனக்காக உயிர் விட்ட ரசிகரை கண்டு கொள்ளாத அஜித் கடவுளா.? என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
அது மட்டுமில்லாமல் தன்னுடைய ரசிகர்களை கண்டு கொள்ளாத, மதிக்காத ஒரு நடிகரான அஜித்தை கடவுளே என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்ற அஜித் ரசிகர்களுக்கு பலரும் அட்வைஸ் செய்து வரும் நிலையில் அஜித் குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.