அஜித் பருப்பு இனி வேகாது… இனிமேலும் தலைக்கனத்துடன் இருக்க முடியாது… என்ன செய்ய போகிறார் அஜித்.?

0
Follow on Google News

கடந்த இரண்டு வருடங்களில் தமிழ் சினிமாவில் வெளியான பெரும்பாலான படங்கள் தோல்வியை தான் தழுவியுள்ளது. விரல் விட்டு என்னும் அளவுக்கு தான் படங்கள் வெற்றி பெற்றுள்ளது. பெரிய பட்ஜெட் படங்கள், உச்ச நடிகர்கள் படங்கள் பெரும்பாலும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சிறிய பட்ஜெட் படமான டான், டாக்டர் போன்ற படங்கள் எதிர்ப்பாராத வசூலை அள்ளி குவித்துள்ளது. அண்ணாத்தே, வலிமை, பீஸ்ட் போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

டாக்டர், டான் போன்ற படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் படம் வெளியாவதற்கு முன்பு படத்தின் ப்ரமோஷன்காக தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, மற்ற பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய புதிய படத்தை அந்த நிகழ்ச்சியில் ப்ரோமோஷன் செய்வது என தன்னுடைய படத்தை ரசிகர்கள் திரையில் வந்து பார்க்க பல்வேறு யுக்திகளை தன்னால் முடிந்தவரை செய்தார் அந்த படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் தொடர்ந்து பல தமிழ் படங்கள் மண்ணை கவ்விய நிலையில், தமிழ்நாட்டில் பிறமொழி நடிகர்கள் நடித்த RRR மற்றும் KGF போன்ற படங்கள் வசூலை அள்ளி குவித்து, அந்த படத்தில் நடித்த தெலுங்கு நடிகர்கள் மற்றும் கர்நாடக நடிகர்களுக்கு தமிழில் ரசிகர்கள் உருவாகும் அளவுக்கு மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதற்கு முக்கிய காரணம் படம் வெளியாவதற்கு முன்பு சுமார் இரண்டு மாதங்களாக நடந்த அந்த படத்தின் ப்ரோமோஷன் தான்.

இதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியாகி நல்ல வசூலை பெற்ற படம் விக்ரம், இந்த படம் பார்த்தவர்களில் பலர் ப்ரோமோஷனை பார்த்து ஏமார்ந்து விட்டததாக தான் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருந்தும் இந்த படத்திற்கான மக்கள் கூட்டம் தற்பொழுது வரை குறையவில்லை. விக்ரம் படம் வெளியாவதற்கு முன்பு, பேன் இந்தியா படம் அளவுக்கு கொடுத்த பில்டப். மேலும் வெளிநாடு , வெளிமாநிலம் என கமல்ஹாசன் இந்த வயதிலும் சுற்றி வந்து ப்ரோமோஷன் செய்தது.

படம் வெளியான உடன் எதிர்மறை விமர்சனத்தை முறியடிக்கும் வகையில், படத்தின் இயக்குனருக்கு கார் பரிசு, நடிகர் நடிகைகளுக்கு பரிசு என, படம் வெற்றி பெற்று விட்டது, மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளார்கள் என்கிற தோற்றத்தை உருவாக்கி ப்ரோமோஷனில் ஈடுபட்டு வந்தார் கமல்ஹாசன். இதனால் தொடர்ந்து திரையரங்குகளில் மக்களின் கூட்டத்தை குறையவிடாமல் பார்த்து கொண்டார் கமல்ஹாசன்.

தன்னுடைய ப்ரோமோஷன் காரணமாக மக்களை ஏமாற்றி படம் பார்க்க வைத்து வசூலை அள்ளி குவித்து விட்டார் கமல்ஹாசன். இந்நிலையில் இனிமேல், நடிகர் அஜித் போன்று படத்தின் ப்ரோமோஷனுக்கு வரமாட்டேன், நல்ல படத்துக்கு விளம்பரம் தேவையில்லை என்று தலைக்கனத்துடன், ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வரமாட்டேன் என பிடிவாதம் பிடிக்கும் அஜித் பருப்பு இனி வேகாது என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில்.

RRR, KGF போன்ற தரமான படங்களுக்கு கூட படம் வெளியாகும் முன்பு சுமார் ஒரு மாதகாலம் படத்திற்கான ப்ரோமோஷன் நடைபெற்று வருகையில், அஜித் நடிக்கும் படத்தில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் தான் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு லாபத்தை பெற்று தரமுடியும் என்றும், அதனால் அஜித் தன்னுடைய நடவடிக்கைகளில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் இல்லை என்றால், வலிமை போன்று அடுத்தடுத்து இரண்டு படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றால்.

அடுத்து புதிய படங்களில் ஒப்பந்தம் செய்யும் போதே ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்தால் மட்டுமே அஜித் போன்ற நடிகர்களை வைத்து தயாரிப்பாளர்கள் படம் எடுப்பார்கள் என்கிற நிலை உருவாகும் என்பதால். இனி 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி கொண்டு படத்தில் மட்டும் தான் நடிப்பேன், ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்க்க மாட்டேன் என அஜித் கண்டிஷன் போட முடியாது என கூறப்படுகிறது.

பாலா மனைவி முத்துமலர் இரண்டாவது திருமணம்… அதிரடி ஏற்பாடு … மாப்பிள்ளை யார் தெரியுமா.?