அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் படம் ப்ரீ புக்கிங்கில் பெரும்பாலான தியேட்டர்களில் குறைவான புக்கிங்கே ஆகியிருந்தது. பெரும்பாலான ரசிகர்கள் இந்தப் படத்தை பார்க்க ஆர்வம் காட்டவில்லை. இதற்கு காரணம் வேட்டையன், கங்குவா, விடாமுயற்சி என பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியதே. அதனால் இந்தப் படத்திற்கு முதல் நாள் சரியான ரெஸ்பான்ஸ் இல்லாமல் இருந்தது.
டிராகன் வெளியாகி முதல் காட்சி முடிந்த உடனேயே படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது. அடுத்தடுத்து படம் பார்த்த எல்லோருமே படம் நன்றாக இருப்பதாக சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்தனர். இதனை தொடர்ந்து 2ம் நாள் படத்தின் விமர்சனங்களை எல்லாம் பார்த்த ரசிகர்கள் தியேட்டருக்கு படை எடுக்கத் தொடங்கினர். அதே போல ஞாயிற்றுக் கிழமை பெரும்பாலான தியேட்டர்கள் ஹவுஸ் ஃபுல்லாகவே இருந்தது.

அஜித்தின் விடாமுயற்சி படத்தை விட டிராகன் படத்திற்கு அதிக டிக்கெட் புக்கிங் இருந்ததாக தியேட்டர் அதிபர்களே தெரிவித்து வருகிறார்கள் . பிப்.21-ம் தேதி வெளியான படம் ‘டிராகன்’. முதல் இரு தினங்களில் மட்டும் உலக அளவில் கிட்டத்தட்ட ரூ.28 கோடி அளவில் வசூல் செய்த நிலையில், மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமையும் அதிக எண்ணிக்கையிலான திரைகளுடன் ஹஃவுஸ் காட்சிகள் கொண்டிருப்பதால், ரூ.35 கோடி அளவிலான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ‘டிராகன்’ வணிக ரீதியாகவும் பெரிய வெற்றிபெறும் வகையில், முதல் மூன்று நாட்களிலேயே எளிதில் ரூ.40 கோடியை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஆச்சரியமாக படம் வெளியான முதல் மூன்று நாள்களிலேயே ரூ. 47 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அலுவலக நாளான திங்கள் கிழமை கூட பல திரைகளில் இப்படம் ஹவுஸ்ஃபுல் ஆகியுள்ளதால் இந்த வார இறுதிக்குள் ரூ. 100 கோடிக்கும் அதிகமாகவே வசூலிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போதையச் சூழலில் ‘டிராகன்’ விரைவில் ரூ.100 கோடி வசூலைத் தொடும் என்பதில் சந்தேகம் இலை.
ஏனென்றால், தமிழ், தெலுங்கு மற்றும் வெளிநாடுகளில் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த வசூல் அதிகரிப்பால், ‘டிராகன்’ படக்குழுவினர் பெரும் உற்சாகமாகி இருக்கிறார்கள்.டிக்கெட் புக்கிங் ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவ் ரிவ்யூ வந்து கொண்டே இருப்பதால் இந்த வார இறுதி வரை டிராகன் படம் நல்ல வசூலை பெறும் என்றே கணிக்கப்படுகிறது. அதேநேரம், தனுஷின் இயக்கத்தில் வெளியாகி டிராகன் படத்தோடு போட்டி போட்டு வந்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் 3 நாட்கள் வெறும் 4.31 கோடியை மட்டுமே வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அமரன் படம் மிக பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து ஓவர் ஆட்டம் போட்டு கொண்டிருந்த சிவகார்த்திகேயனை, சத்தமே இல்லாமல் வந்து ட்ராகன் படம் சம்பவம் செய்து சிவகார்த்திகேயன் ஆட்டத்துக்கு முற்று புள்ளி வைத்துள்ளார் பிரதீப் ரங்கநாதன், மேலும் சுமார் இரன்டு வருடமாக பெரும் செலவில் எடுக்கப்பட்ட விடாமுயற்சி மிக பெரிய தோல்வியை தழுவிய காலத்தில் வசூலில் அஜித்தை பின்னுக்கு தள்ளும் வகையில் அமைத்துள்ளது பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ட்ராகன் திரைப்படம்..