நடிகர் விஜய்க்கு சினிமா துறையில் சம போட்டியாளராக திகழ்ந்து வருகின்றவர் நடிகர் அஜித். விஜய் சம்பளம் ஏறினால் அதையே சுட்டிக்காட்டி விஜய் இத்தனை கோடி வாங்குகிறார் எனக்கும் இத்தனை கோடி தாருங்கள் என்று அஜித், விஜய்க்கு போட்டியாக சம்பளத்தை ஏற்றி வரக்கூடியவர். மேலும் யார் சினிமாவில் பெரியவர்கள் நீயா – நானா என்பதை நிரூபிக்கும் வகையில் விஜய் படத்துடன் தன்னுடைய படத்தை நேரடியாக மோதவிடும் செயலிலும் அவ்வப்போது அஜித் செய்து கொண்டிருப்பார்.
விஜய் வெளிப்படையாக சில விஷயங்களை செய்தாலும், அஜித் மறைமுகமாக விஜய்க்கு போட்டியாக பல வேலைகளை செய்து கொண்டிருப்பார். குறிப்பாக விஜய் குறித்து ஏதாவது ஒரு செய்தி முக்கியத்துவம் பிடித்து விட்டால், உடனே அஜித் குறித்த ஒரு புகைப்படமோ அல்லது வேற ஏதோ ஒரு செய்தியை தன்னுடைய மேனேஜர் மூலமாக வெளியிட்டு அந்த செய்தியை முக்கியத்துவம் பெற வைப்பர் அஜித்.
அதே போன்று அஜித் குறித்து ஏதாவது ஒரு முக்கிய செய்தி வெளியானால் மறுபக்கம் விஜய் தன்னை பற்றி ஏதாவது ஒரு செய்தியை வெளியிட வைத்து இரண்டு செய்திகளையும் முக்கியத்துவம் பெறவைத்து இரண்டு ரசிகர்களிடையே ஒரு மோதலை போக்கை உருவாக்கக் கூடியவர்கள் அஜித் விஜய் இருவரும். குறிப்பாக விஜய்யின் பிடித்த இயக்குனர்களிடம் அஜித் படம் நடிப்பது கிடையாது, அதேபோன்று அஜித்துக்கு பிடித்தமான இயக்குனர்களிடம் விஜயும் படம் நடிப்பது கிடையாது.
அந்த வகையில் கடுமையான போட்டியாளர்களாக சினிமாவில் இருவரும் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் விஜய் அரசியலில் என்ட்ரி கொடுத்தால் அவருக்கு போட்டியாக அஜித் அரசியலில் என்ட்ரி கொடுப்பதற்கான வாய்ப்பு குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக அஜித் அரசியல் சார்ந்து ஏதும் கருத்துக்கள் தெரிவிக்க மாட்டார். ஆனால் விஜய் அரசியலில் என்ட்ரி கொடுக்கும் போது அஜித்தை அவருக்கு போட்டியா அரசியலில் களம் இறங்குவதற்கான பேச்சுவார்த்தையை அஜித்துடன் பிரபல பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
ரங்கராஜ் பாண்டே அஜித் உடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தவர் அந்தவகையில் அஜித் உடன் நெருக்கமான ஒரு நட்பு ரங்கராஜ் பாண்டேவுக்கு உண்டு. அந்த வகையில் அஜித்தை விஜய்க்கு போட்டியாக அரசியலில் களம் இறக்க முக்கிய அரசியல் கட்சியின் பின்புலத்துடன் ரங்கராஜ் பாண்டே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசல் புறசலாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அஜித்துக்கு மக்கள் கூட்டத்தை கண்டாலே ஒரு வித அலர்ஜி. அப்படி இருக்கும்போது அஜித் நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டார் என்றும் ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் நீண்ட காலமாக ரஜினி அரசியலுக்கு இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என்று சுமார் 20 வருடங்களுக்கு மேல் பேசி வந்த நிலையில், மறுப்பக்கம் எனக்கு அரசியல் தேவையே இல்லை, நான் அரசியலுக்கு வரமாட்டேன் என பேசிவந்தவர் கமலஹாசன்.
ஆனால் ரஜினி அரசியல் கட்சி தொடங்கப் போகிறார் என்று அறிவித்த உடனேயே, சினிமாவில் தன்னுடைய சக போட்டியாளரான ரஜினிக்கு போட்டியாகவே அரசியல் கட்சி தொடங்கி தேர்தலையும் சந்தித்தார் கமலஹாசன். இது தமிழக மக்கள் யாரும் எதிர்பார்க்காத ஒரு விஷயம். அந்த வகையில் விஜய் அரசியலுக்கு என்ட்ரி கொடுத்தால் அவருக்கு எதிராக அஜித் அரசியலில் களம் இறங்குவதற்கான வாய்ப்பு அதிகம் என்றும், கமலஹாசன் எதிர்பாராத விதத்தில் அரசியலில் என்ட்ரி கொடுத்தது போன்று அஜித்தும் விஜய்க்கு போட்டியாக நிச்சயம் அரசியலில் என்ட்ரி கொடுத்து விஜய்க்கு சவாலாக விளங்குவர் என தகவல் வெளியாகியுள்ளது.