தமிழ் சினிமாவை இப்போது கட்டிப்போட்டு வைத்துள்ளவர்கள் விஜய் மற்றும் அஜித். இந்த இரு நடிகர்களுக்கும் தான் தற்போது அதிகமான ரசிகர்கள் உள்ளனர். இவர்களது படம் வெளியாகிறது என்றாலே ரசிகர்கள் ஆரவாரத்துடன் ஆர்ப்பரிக்கின்றனர். இவர்கள் இருவரும் இப்போது 50 படங்களை தாண்டி நடித்து வருகிறார்கள். அஜித் 1990ல் ‘என் வீடு என் கணவர்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
ஆனால், விஜய், 1984லேயே வெற்றி, குடும்பன் படங்களின் மூலம் அறிமுகமாகியிருந்தார். இருவரும் ஹீரோவாக ஓராண்டு இடைவெளியில் அறிமுகமாயினர். 1992ல் நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் விஜய் நாயகனாக அறிமுகமாக, 1993ல் வெளியான அமராவதி படத்தின் மூலம் அஜித் நாயகனாக அறிமுகமானார். அடுத்த சில ஆண்டுகளில் விஜய்யும் அஜித்தும் மெல்லமெல்ல முன்னேறிக்கொண்டிருந்தனர்.
1995ஆம் ஆண்டில் வெளியான ராஜாவின் பார்வையிலே படத்தில் விஜய் நாயகனாக நடிக்க, அஜித் கௌரவத் தோற்றத்தில் வந்துபோனார். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ஒரே படம் இது மட்டும்தான்.
இந்த காலகட்டத்தில், ரஜினியும் கமலும் களத்தில் இருந்தனர். கமல் சதி லீலாவதி, குருதிப்புனல் என்று சென்றுகொண்டிருக்க, ரஜினி பாட்ஷா, முத்து என ரசிகர்களை மகிழ்வித்துக்கொண்டிருந்தார்.
இந்த காலகட்டத்தில், திரையுலகம் ரஜினி – கமல் என்ற போட்டிக்குள்தான் இயங்கிக் கொண்டிருந்தது.
1996ல் அஜித் நான்கு படங்களிலும் விஜய் ஐந்து படங்களிலும் நடித்தார்கள். இதில் அஜித் நடித்த வான்மதி படமும் விஜய் நடித்த கோயம்புத்தூர் மாப்பிள்ளை படமும் பொங்கலுக்கு வெளியாயின. இதுதான், அஜித் – விஜய் திரைப்படங்கள் ஒரே சமயத்தில் ரிலீஸாகிய முதல் தருணம். இரண்டு படங்களுமே வெற்றிபெற்றன.
அஜித் விஜய் படங்கள் கடந்த 25 ஆண்டுகளாக தனித்தனியாக வந்து பெருவெற்றியும், சில படங்கள் சுமாராகவும், சில படங்கள் தோல்வியையும் தழுவியுள்ளன ஆனாலும் இருவர் படங்களும் சுமார்13 முறைக்கு மேல் நேரடியாக மோதியுள்ளன. கடைசியாக விஜய் நடித்த வாரிசு படமும் அஜித் நடித்த துணிவு படமும் மோதியது.
இந்நிலையில் நடிகர் விஜய்க்கு ஒழுக்கம் என்பது இல்லை அஜித்திடம் தான் உள்ளது என தேவயானியின் கணவர் ராஜகுமாரன் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர், வாரிசு படத்தில் விஜய் தப்பு தப்பா நடித்திருந்தார். அப்படத்தில் சரத்குமார் மட்டுமே தான் சரியாக நடித்தார். என்னதான் படமாக இருந்தாலும் ஒரு தந்தையிடம் இப்படியா நடந்துகொள்வது. இதைப்பார்த்து மற்ற ரசிகர்களும் அவர்களின் அப்பாவிடம் இப்படி தானே நடந்துகொள்வார்கள்.
விஜய்யை போல ஒரு ஹீரோ இதுபோல அப்பாவை எதிர்த்து பேசுவது போல நடிக்கக்கூடாது. மேலும் ரஜினி, விஜய்யை விட சரத்குமார் தான் பெரிய நடிகர். அவர் தன் கதாபாத்திரங்களை கனகச்சிதமாக நடித்து வருகின்றார். வாரிசு படத்தில் அவர் மட்டும் தான் நன்றாக நடித்திருந்தார் என கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, “உங்களுடைய அப்பாவை வேண்டுமானால் நீங்கள் மதிக்காமல் போகலாம் ஆனால், ரசிகர்களுக்கு நீங்கள் அதனை சொல்லிக்கொடுக்க கூடாது. எவ்வளவு நல்ல விஷயங்களை கற்று கொடுக்கிறது சினிமா நல்லதோ கெட்டதோ ஒரு விஷயம் செய்தால் அதனை நல்ல கருத்தாக தான் புகுத்த வேண்டும்.
அது விஜய்யாக இருந்தாலும் சரி, அஜித்தாக இருந்தாலும் சரி. நீங்கள் அஜித்தை எடுத்துக்கொண்டீர்கள் என்றால் விஜய்யை போல அப்படி நடிக்க சொல்லுங்கள் பார்ப்போம். அஜித் அப்படி நடிக்கவே மாட்டார், 1000 இருந்தாலும் அவர் நடிப்புக்கென்று ஒரு விஷயம் வைத்து இருக்கிறார். அஜித் கிட்ட ஒரு மாதிரியான ஒழுக்கம் இருக்கிறது ” என ராஜகுமாரன் கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.