கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து அஜித் நடிக்க இருக்கும் புதிய படம் குறித்த தகவலுக்காக அவருடைய ரசிகர்கள் தொடர்ந்து எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் அஜித் ரசிகர்கள் தங்களின் தல படம் என்ன ஆச்சு, என்கின்ற அப்டேட் கேட்டு கேட்டு அவர்களே டயடாகி ஒரு ஓய்ந்த மனநிலைக்கு வந்து விட்டார்கள் என்றும் கூட சொல்லலாம்.
இந்த நிலையில் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் என அனைத்தும் உறுதியான பின்பும் கூட படத்தின் பெயரை வெளியிடுவதற்கு சில மாதங்களாகி, ஒரு வழியாக விடாமுயற்சி என டைட்டில் வெளியிட்டு அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய இருந்தாலும், டைட்டில் வெளியிட்ட பின்பு அடுத்து இந்த படப்பிடிப்பு நடப்பது தொடர்பாக எந்த ஒரு தகவலும் இல்லை.
விடாமுயற்சி பத்ம அஜித் பிறந்தநாள் அன்று மே 1ஆம் தேதி அல்லது மே முதல் வாரத்தில் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கான வாய்ப்பும் இல்லை. இதனை தொடர்ந்து அஜித் நடிக்க இருக்கும் விடாமுயற்சி படம் கைவிடப்படுகிறதா.? என்கின்ற விமர்சனம் சினிமா வட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இது குறித்து சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில் பல தகவல் வெளியகியுள்ளது.
நடிகர் அஜித்துக்கு சினிமாவில் நடிப்பதற்கு விருப்பமில்லை என்றும், சில கட்டாயத்தினால் அவர் சினிமாவில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. காரணம் விடா முயற்சி படம் எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என பலரும் எதிர்பார்க்க, ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் திடீரென்று ஏகே மோட்டோ ரைட் என்கின்ற ஒரு நிறுவனத்தை தொடங்கி பலரை குழப்பம் அடைய செய்துள்ளார் அஜித்.
அஜித் தொடங்கியுள்ள நிறுவனத்தில், யார் வேண்டுமானாலும் பைக் பயணம் வரலாம், நாங்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்வோம். ஆனால் அஜித் உடன் வர மாட்டார், இது அஜித்தின் தனிப்பட்ட ஒரு விளம்பரம் என ஒரு நிறுவனத்தை தொடங்கியுள்ளார் நடிகர் அஜித். இதெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது நடிகர் அஜித்துக்கு சினிமாவில் தொடர்ந்து நடிக்க விருப்பமில்லை என்றும், அவருக்கு தொடர்ந்து பைக் பயணம் செல்வதும் அடுத்து தொழில் ரீதியாக ஒரு பிசினஸ்மேனாக வளர வேண்டும் என்கின்ற ஆசை தான் அஜித்துக்கு இருக்கிறதோ என்கின்ற சந்தேகமும் எழுந்து வருகிறது
குறிப்பாக அஜித் பொதுவாகவே ஒரு பிடிவாத குணம் கொண்டவர் என கூறப்படுகிறது, அவரின் பிடிவாத குணம் தற்பொழுது ஓரளவு மாறி இருக்கிறது என்றாலும் கூட, ஆரம்ப கட்டத்தில் மிகவும் கோபப்படக்கூடிய நபராக இருந்துள்ளார். இன்று ஒரு பக்குவமான நடிகராக வந்தாலும் கூட அவருடைய பிடிவாத குணம் இன்றும் ஓரளவு இருந்து கொண்டு தான் இருக்கிறது.
அந்த வகையில் சினிமா மீது அஜித் வெறுப்படைந்து அவர் விலகிச் செல்வது போன்ற மனநிலையில் இருப்பது போன்றும், ஆனால் சிலர் கட்டாயப்படுத்தி வாங்க சார், வந்து கேமரா முன்னாடி நில்லுங்க சார், என்று அவரை கட்டாயபடுத்தி நடிக்க வைப்பது போன்ற ஒரு சூழல் தற்பொழுது அஜித்தின் நடவடிக்கைகளை பார்க்கும்போது உணர முடிகிறது என்கின்றனர் சினிமா வட்டாரத்தினர்
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் அஜித் ஜிம்முக்கு சென்று ஒர்க்கவுட் செய்வதாகவும், முடி வெட்டியதாகவும் தகவல் வழியாக நிலையில், இதெல்லாம் விடாமுயற்சி படத்திற்காக செய்தாரா அல்லது பைக் ரைடு செல்வதற்காக செய்தாரா என்கின்ற குழப்பமும் நீடித்து வருகிறது. அந்த வகையில் விடாமுயற்சி படம் அடுத்த ஒரு சில வாரங்களில் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை என்றால் இந்த படம் கைவிடப்படும், அதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது என்றும் தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.