நடிகர் அஜித், விக்ரமுக்கு பிறகு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ள ஒரு நடிகர் இவர்தான்…

0
Follow on Google News

தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை நடிகர் அஜித், விக்ரம் இவர்களுக்கு பிறகு தற்போது தனுஷ் பிடித்து வருகிறார். அஜித் மற்றும் விக்ரம் யாருடைய தயவும் இல்லாமல் தங்கள் கடின உழைப்பின் மூலம் இந்த சிகரத்தை அடைந்துள்ளார்கள். தங்களுடைய வாழ்க்கையை தாங்களே செதுக்கியவர்கள் அந்த வரிசையில்தான் தனுஷும். நடிகர் தனுசும் சூப்பர் ஸ்டாரின் மருமகனாக இருந்தாலும் அவர் தயவால் எழுந்து வராமல் தன்னுடைய உழைப்புகளை அவரே முயற்சி செய்து வெற்றியை அடைந்தார்.

நடிகர் தனுஷ் நடித்து தொடர்ச்சியாக வெளிவந்த வட சென்னை, அசுரன், கர்ணன் போன்ற திரைப்படங்கள் வெற்றி குவிந்துள்ளது. இந்த வரிசையில் விரைவில் இடம் பிடிக்க ஜகமே தந்திரம் திரைப்படம் காத்துக் கிடக்கிறது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள இந்த திரைப்படம் ஜீன் 18 தேதி ஓடிடி-தளத்தில் வெளியாக இருக்கிறது.

இதில் நடிகர் தனுஷ் மதுரையை சேர்ந்த ரவுடி சுருளியாக நடித்துள்ளார். இந்த ஜகமே தந்திரம் திரைப்படத்தின் டீஸர், ட்ரெய்லர், பாடல்கள் வெளி வந்தது முதல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திரைப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் காட்சிகளின் மூலம் நடிகர் தனுஷின் உழைப்பை அறியமுடிகிறது.

முதலில் திரை அரங்குகளில் வெளியாக இருந்த இந்த திரைப்படம் வெளியிடும் தேதிகள் தள்ளிப் போயின. பிறகு கொரோனா ஊரடங்கு காரணமாக வெளியாகும் தேதி மேலும் தாமதமானது. நீண்ட இழுபறிக்குப் பிறகு சில மாதங்கள் முன்பு ஜகமே தந்திரம் திரைப்படம் நெட் பிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவித்தது. நடிகர் தனுஷ் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளதால் இந்த திரைப்படத்தை மிகப்பெரிய தொகையை கொடுத்து நெட்பிக்ஸ் வாங்கியதாக செய்திகளும் வெளிவந்தது. எது எப்படியோ, படக்குழு அறிவித்தது போல ஜீன் 18ஆம் தேதி எந்த ஒரு தடங்கலும் இல்லாமல் இந்த திரைப்படம் வெளியாகும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.