நடிகர் அஜித்குமாரின் துணிவு படம் கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியானது. இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் அடுத்ததாக லைகா தயாரிப்பில் நடிகர் அஜித், திரிஷா, அர்ஜூன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் விடாமுயற்சி. ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் படங்களை தொடர்ந்து 5வது முறையாக அஜித்துடன் இணைந்து நடிக்கிறார் த்ரிஷா.
லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். வேதாளம், விவேகம் படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக, அஜித் படத்துக்கு இசையமைக்கிறார் அனிருத். அத்துடன் முதல் முறையாக மகிழ் திருமேனியுடன் கைகோர்த்துள்ளார். இந்தப் படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு மே மாதத்தில் அஜித் பிறந்தநாளையொட்டி அறிவிக்கப்பட்ட நிலையிலும் உடனடியாக சூட்டிங் துவங்கப்படவில்லை.
விடாமுயற்சி படம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் எதுவும் வெளிவராத நிலையில் ஷுட்டிங் ஸ்பாட் லீக் புகைப்படங்கள், அஜித்தின் லுக் போன்ற எந்த படங்கள் விடியோக்கள் வந்தாலும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகிறார்கள். இந்நிலையில் கடந்த இரு மாதங்களாக இந்தப் படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் நடந்து வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி வருகிறது.
ஆன் ஸ்கிரீன், ஆஃப் ஸ்கிரீன் என எதுவாக இருந்தாலும் அஜித்தின் லுக்கில் இயல்பாகவே ரிச்னஸும், ஸ்டைலிஷ் கலந்து இருக்கும். அந்த வகையில் விடாமுயற்சி படத்துக்காக அஜர்பைஜான் படத்தின் படப்பிடிப்பில் இருந்து வரும் அஜித்தின் புதிய லுக் சமூக வலைத்தளத்தில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் பிளாக் சூட், பிளெசர், கூலிங் கிளாஸ், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருக்கும் ஸ்டைலிஷ் லுக்கில் அஜித் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த ரசிகர்கள் பயர் விட்டு வருகின்றனர்.
படத்தில் நடித்து வரும் ஆரவ், படக்குழுவினருடன் பாகு நகரில் அஜித்குமார் டின்னர் சென்றுள்ளார். இந்த புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகிறது. இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் சில தினங்கள் பிரேக் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து கடந்த 12ம் தேதி படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் திட்டமிடப்பட்டது. இருந்தபோதிலும் படத்தின் சூட்டிங் இன்னும் துவங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
லைகா நிறுவனத்தின் நிதி நெருக்கடி காரணமாக படத்தின் சூட்டிங் தள்ளிப் போவதாகவும் கூறப்படுகிறது
இந்நிலையில் அஜித்தின் ரீசண்ட் கிளிக்கை அவரது மனைவியும் முன்னாள் நடிகையுமான ஷாலினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் ஷாலினி அஜித் தொடர்ந்து தன்னுடைய மகள், தங்கை, அஜித் மற்றும் மகனுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது அஜித்தின் ஸ்டைலிஷ்ஷான புகைப்படத்தை தற்போது பகிர்ந்துள்ளார். இந்தப் படத்தில் கூலர்சுடன் அஜித் மாஸாக காணப்படுகிறார். அவரது சமீபத்திய உடை தேர்வு குறித்தும் அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மனைவி நடிகை ஷாலினி இன்ஸ்டாகிராம் இல் ஷேர் செய்த அஜித்குமாரின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரலான நிலையில், புளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் ”தமிழ் சினிமாவில் பப்ளிசிட்டியை விரும்பாத ஒரே நடிகர். டெய்லி ஒரு ஃபோட்டோ மட்டும் ரிலீஸாகும். மத்தபடி சத்தியமா பப்ளிசிட்டி பிடிக்காது.” என பதிவிட்டு கலாய்த்துள்ளார்.