தமிழக அரசியலில் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி போன்ற ஆளுமைமிக்க தலைவர்கள் மறைந்த பின்பு தமிழக அரசியலில் இருந்த தலைமைக்கான காலியிடத்தை நிரப்ப கடும் போட்டி நிலவி வந்தது, காலியிடத்தை நாங்கள் தான் நிரப்ப போகிறோம் என தீடிர் தீடிரென ஒவ்வொருவராக அரசியல் அறிவிப்புகளை வெளியிட்டார்கள், யாரும் எதிர்ப்பாராத விதமாக நடிகர் கமல்ஹாசன் புதிய கட்சியை தொடங்கினார்.
நடிகர் ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சியை தொடங்கி 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்து. சும்மா இருந்த அவரது ரசிகர்களை உசுப்பேத்தி விட்டு, பின்பு கொரோனவை காரணம் தெரிவித்துவிட்டு எஸ்கேப் ஆனார். நடிகர் விஜய் தொடர்ந்து அரசியல் கருத்துக்களை தெரிவித்து வந்தார். இப்படி முன்னனி நடிகர்கள் பலர் அரசியலில் அவதாரம் எடுக்க போட்டி போட்டு கொண்டிருந்த நேரத்தில் நடிகர் அஜித்தை அரசியலில் இறக்கிவிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற தகவல் ஓன்று வெளியாகியுள்ளது.
2015 ஆம் ஆண்டு சென்னையில் வெள்ளம் வருவதர்க்கு 4 நாட்களுக்கு முன்பு, சென்னையில் மிக பெரிய வெள்ளம் வர இருக்கிறது, இதனால் மிக பெரிய பாதிப்பு ஏற்படும், மக்கள் அனைவரும் சென்னையை விட்டு வெளியேற வேண்டும் என பரபரப்பாக எச்சரிக்கை விடுத்த சாமியார் பழனி அசோக் ஜி சொன்னது போன்றே, சென்னையில் வெள்ளம் ஏற்பட்டு பொருட்கள் வெள்ளத்தில் அடித்து இழுத்து செல்லப்பட்டு, மக்களின் வாழ்வாதாரம் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
அவர் கடந்த 2018ம் ஆண்டு சினிமா துறையை சேர்ந்த முக்கிய நபரை அழைத்து பேசியுள்ளார். அப்போது நடிகர் அஜித் தமிழக அரசியலுக்கு வர வேண்டும், வந்தால் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்றும், அவர் அரசியல் வருகைக்காக எந்த ஒரு பணமும் அவர் கையில் இருந்து செலவு செய்ய வேண்டாம், சுமார் ரூபாய் 500 கோடி வரை அஜித் அரசியலுக்காக செலவு செய்ய வெளிநாட்டில் உள்ள மிக பெரிய செல்வந்தர் ஒருவர் தயாராக இருக்கிறார்.
அவரின் தூதுவராக தான் நான் பேசுகிறேன் என பழனி அசோக் ஜி என்கிற சாமியார் அந்த சினிமா முக்கிய நபரிடம் தெரிவித்து, இது குறித்து நடிகர் அஜித்திடம் பேச வலியுறுத்தியுள்ளார். இந்த தகவலை அந்த சினிமா முக்கிய நபர் தற்போது வெளியிட்டுள்ளார். இந்நிலையில் 500 கோடி செலவு செய்து நடிகர் அஜித்தை அரசியலில் இறக்கிவிடுவதற்கு தயாராக இருந்த அந்த வெளிநாட்டு செல்வந்தர் யாராக இருக்கும் என்கிற தகவலும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அதில் கடந்த 2016 சட்டசபை தேர்தலில் போது அதிமுக அரசியல் செலவுக்காக ஒரு தொகையை சுவாமி நித்தியானந்தா கொடுத்ததாக தகவல் வெளியானது. அந்த வகையில் 2021 சட்டசபை தேர்தலில் நடிகர் அஜித்தை அரசியலில் இறக்கி விடுவதற்காக சுவாமி நித்தியானந்தா தான் பழனி அசோக் ஜியை தூதுவராக அஜித்தை அரசியலுக்கு அழைத்து வருவதற்காக ஏற்பாடு செய்திருக்க வேண்டும் என கூறப்படுகிது. இந்த தகவல் அஜித் கவனத்துக்கு எடுத்து சென்ற போது சிரித்துவிட்டு ஏதும் பதில் பேசாமல் கடந்து சென்றதாக கூறப்படுகிறது.