நடிகர் அஜித் நடிப்பில் தற்பொழுது திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் துணிவு. இந்த படத்தில் நடித்து கொண்டிருக்கும் பொழுதே அஜித் தன்னுடைய அடுத்த படம் இயக்க இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பை கொடுத்து லைக்கா தயாரிப்பில் கமிட்டானார். நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்திற்கும் முன்புஇந்த படம் கமிட் செய்யப்பட்டது.
அப்போது அஜித் நடிக்கும் புதிய படத்தில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடிப்பதாக இருந்தது, ஆனால் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு பின்பு கதாநாயகியை மாற்ற வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டது. இதனால் நயன்தாராவுக்கு பதில் வேறு ஒரு கதாநாயகியை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்துள்ள நடிகை திரிஷா.
நயன்தாரா மார்க்கெட் இழந்துள்ளதால் அந்த இடத்தை தக்க வைக்க கடும் முயற்சி செய்து வருகிறார். அந்த விஜய் நடிக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் திரிஷா கமிட்டாகியுள்ளார். இதேபோன்று அஜித் நடிக்கும் படத்திலும் கமிட் ஆகிவிட்டால் அடுத்தடுத்து தொடர்ந்து ஒரே நேரத்தில் இரண்டு முன்னணி நடிகர்கள் படம் வெளியாகும் சமயத்தில் தன்னுடைய மார்க்கெட் பல மடங்கு உயரும் என்றும், மேலும் அடுத்து நம்பர் ஒன் நடிகை இடத்தை பிடித்துவிடும் முயற்சியில் நடிகர் அஜித் நடிக்கும் புதிய படத்தில் சிபாரிசு செய்ய திரிஷா கேட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் அஜித் சிபாரிசில் திரிஷாவை நடிக்க வைக்க தயாரிப்பு நிறுவனம் ஓகே செய்துள்ளது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்திடம், ஏற்கனவே த்ரிஷாவுக்கும் எங்களுக்கும் பிரச்சனை உள்ளது அதனால் திரிஷா இந்த படத்தில் நடித்தால் வேலை செய்வது சிரமமாக இருக்கும் அதனால் திரிஷா வேண்டாம் என்று விக்னேஷ் சிவன் தயாரிப்பு நிறுவனத்திடம் தெரிவித்து திரிஷாவை அஜித் படத்தில் இடம் பெறாமல் செய்துவிட்டார்
இந்த நிலையில் ஜனவரி இறுதியில் விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் இதுவரை கதாநாயகி கிடைக்கும் படப்பிடிப்பு தேதி தாமதமாகி வருகிறது. இதற்கு காரணம் விக்னேஷ் சிவன் தன்னுடைய படத்தின் திரிஷா, சமந்தா போன்ற நடிகைகளை நடிக்க வைக்க விரும்பினால் கூட, உன்னுடைய படத்தின் இவர்கள் எல்லாம் நடிக்க கூடாது என கணவன் விக்னேஷ் இவனுக்கு நயன்தாரா கண்டிஷன் போட்டு வருவதால் எந்த கதாநாயகியை வைத்து படம் எடுப்பது என்று மிகப்பெரிய குழப்பத்தில் இருந்து வருகிறார் விக்னேஷ் சிவன்.
இந்த நிலையில் அஜித் ஏற்கனவே திரிஷாவை சிபாரிசு செய்தும் விக்னேஷ் சிவன் புறக்கணித்த நிலையில், மேலும் படப்பிடிப்பு படப்பிடிப்பும் தேதியும் தள்ளிக் கொண்டே செல்வதால், பொறுமை இழந்த அஜித், தான் இந்த படத்தை விரைவில் முடித்துவிட்டு பைக் பயணம் செல்ல இருப்பதால் தான் நடிக்கும் காட்சிகளை முதலில் எடுத்து விடுங்கள் பிறகு ஹீரோயினை தேர்வு செய்து அவர் நடிக்கும் காட்சிகளை எடுக்கலாம் என பட குழுவினரிடம் தெரிவித்துள்ளார் அஜித்.
இதனை தொடர்ந்து பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் அஜித் நடிக்கும் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது, இதில் அஜித் நடிக்கும் காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்ட இருப்பதாக கூறப்படுகிறது.