அஜித் போட்ட கண்டிஷன்… வாய்ப்புக்காக நயன்தாராவை கழட்டிவிட்ட விக்னேஷ் சிவன்…

0
Follow on Google News

துணிவு படத்தை முடித்துவிட்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்தில் நடிப்பதற்கான அனைத்து நடிகர் நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நடிகர்களிடம் கால் சீட்டும் பெற்றார் விக்னேஷ் சிவன். இந்த நிலையில் படப்பிடிப்பு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு விக்னேஷ் சிவனை நேரில் அழைத்த அஜித், மீண்டும் ஒருமுறை முழு கதையும் கேட்டு எனக்கு கதை பிடிக்கவில்லை, இதில் என்னால் நடிக்க முடியாது என மறுத்து விட்டார் அஜித்.

படத்தில் கமிட்டாவதற்கு முன்பே கதையை கேட்டுவிட்டு தான் விக்னேஷ் சிவனை ஓகே செய்துள்ளார் அஜித், ஆனால் படப்பிடிப்பு தொடங்கும் இந்த நேரத்தில் அஜித் படம் பிடிக்கவில்லை என்று ஒரே போடாக போட்டவுடன் கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக இந்த படத்திற்காக உழைத்த விக்னேஷ் சிவனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போய் நின்றுள்ளார். மேலும் அஜித்தை எவ்வளவோ கன்வின்ஸ் செய்ய விக்னேஷ் சிவன் முயற்சித்தும் அதற்கு அஜித் உடன்படவில்லை.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசிய நயன்தாரா, இந்த படத்தில் இருந்து விக்னேஷ்சிவன் வெளியேற்றப்பட்டால் எங்களுக்கு அது சினிமாவில் மிகப்பெரிய அவமானமாக கருதப்படும். மேலும் சுமார் 8 மாதங்களுக்கு மேலாக தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் இந்த படத்திற்காக அதிகம் வேலை செய்துள்ளார். படப்பிடிப்பு தொடங்கப்படும் இந்த சூழ்நிலையில் இயக்குனரை மாற்றினால் எங்களுடைய எதிர்காலம் சினிமாவில் மிகப்பெரிய கேள்விக்குறி ஆகும்.

உங்களுக்கு கதையில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றால் நீங்கள் விக்னேஷ் சிவனிடம் சொல்லுங்கள், நிச்சயம் மாற்றம் செய்வார் என நயன்தாரா பேசியுள்ளார். ஆனால் அஜித் சார் வேண்டாம் என சொல்லிய பின்பு நாங்க என்ன பண்ண முடியும் என தயாரிப்பு தரப்பு நயன்தாராவுக்கு பதில் தந்துள்ளது. இதன் பின்பு அஜித்தை கன்வின்ஸ் செய்யும் முயற்ச்சியில் இறங்கிய நயன்தாரா, அஜித்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

ஒரு கட்டத்தில் நயன்தாரா, ப்ளீஸ் சார் என, கண்ணீர் என கெஞ்சாத குறையாக நயன்தாரா பேசியும் கதை எனக்கு பிடிக்கவில்லை என்று ஒரே முடிவோடு நயன்தாரா கோரிக்கையை நிராகரித்து விட்டார். இந்நிலையில் கதையை கேட்டு தான் முதலில் கணவர் விக்னேஷ் சிவனை கமிட் செய்தார் அஜித், ஆனால் அதே கதையை திரும்ப கேட்டுவிட்டு பிடிக்கவில்லை என்றால் விக்னேஷ் சிவன் மீது அஜித்துக்கு தனிப்பட்ட வெறுப்பு தான் காரணம் என்று கூட பரவலாக பேசப்பட்டது.

இந்நிலையில் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக மகிழ் திருமேனியை தன்னுடைய படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார் அஜித், அந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் தன்னை நம்பி வாழ்ந்தவர்கள் தான் உண்டு என வரலாறு சொல்ல வேண்டும், என்னை நம்பி கேட்டு போனவர்கள் யாரும் இருக்க கூடாது என்பதால், விக்னேஷ் சிவனுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க மனம் வந்துள்ளார் அஜித் என கூறப்படுகிறது.

விடாமுயற்ச்சி படத்தை முடித்து விட்டு, அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு அஜித் கொடுக்க இருப்பதாகவும், ஆனால் ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக இருந்தது, ஆனால் இந்த முறை நயன்தாரா நயன்தாரா வேண்டாம், அவருக்கு பதில் திரிஷாவுக்கு வாய்ப்பு தரவேண்டும் என அஜித் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து அஜித் பட வாய்ப்புக்காக, அஜித்துக்கு ஜோடியாக நயன்தாராவை கழட்டிவிட்டு திரிஷாவுக்கு நடிக்க விக்னேஷ் சிவனும் ஓகே என்று சொல்லிவிட்டாராம், விரைவில் இது குறித்த அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என கூறப்படுகிறது.