வேற லெவல் வெற்றி… எதிர்மறை விமர்சனங்களை சல்லி சல்லியாக உடைத்த விடாமுயற்சி…

0
Follow on Google News

விடாமுயற்சி படம் வெளியான பின்பு சில நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் இந்த படத்துக்கு எதிராக எதிர்மறையாக பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். குறிப்பாக நடிகை திரிஷாவிற்கு இன்னொரு ஒருவர் மீது ஒரு காதல் இருப்பது போன்று சித்தரித்தது, மிகப்பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம் நடிகர் அஜித் தன்னுடைய மனைவி திரிஷாவிற்கு இன்னொருவர் மீது ஒரு ஈர்ப்பு இருக்கு என்று தெரிந்தும், எப்படி ஏற்றுக் கொள்கிறார்.

அதுவும் ஒரு மாஸ் ஹீரோவான அஜித் படத்தில் இப்படி ஒரு காட்சி தேவையா என்று பலரும் கடுமையான விமர்சனம் செய்து வரும் நிலையில், இந்த படத்தின் கதாபாத்திரங்களை ஒரு அடித்தட்டு மக்களாகவோ, நடுத்தர மக்களாகவோ காட்டப்படவில்லை. ஒரு ஹை கிளாஸ் மக்களாக அஜித்தும் திரிஷாவும் இந்த படத்தின் கதாபாத்திரமாக வாழ்ந்து இருக்கிறார்கள்.

அப்படி கதை நகர்கிறது, உயர்த்தட்டு மக்களாக அவர்களுடைய திருமண நிகழ்வில் கூட மது அருந்துவது போன்ற பார்ட்டிகள் என, ஒரு உயர் தட்டு மக்களாக காட்டப்படும் கதாபாத்திரத்தில், அவர்களுக்கு விவாகரத்து என்பது ஒரு பெரிய விஷயம் அல்ல, இது சினிமா கதாபாத்திரத்திற்காக வடிவமைக்கப்பட்டது தான், குறிப்பாக விடாமுயற்சி ஹாலிவுட் படம் போன்று உள்ளது என்று எதிர்பார்க்கப்படும் பொழுது.

ஹாலிவுட் படத்தில் மனைவி வேற ஒருவர் மீது ஈர்ப்பு வருவது என்பதெல்லாம் பெரிய விஷயமே இல்லை, அப்படி இருக்கும் பொழுது அஜித் மனைவியான திரிஷா வேறு ஒருவருடன் ஈர்ப்பில் இருக்கிறார், இதெல்லாம் என்ன லாஜிக் என்றெல்லாம் விமர்சனம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் விடாமுயற்சி படத்தின் முதல் பாதி ரொம்ப மெதுவாக செல்கிறது, குறிப்பாக இந்த படத்தில் அர்ஜுனின் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்படவில்லை என்றெல்லாம் விமர்சனம் வருகிறது.

ஆனால் முதல் பாதியில் முதல் 20 நிமிடம் காதல், திருமணக் காட்சி என்றெல்லாம் மெதுவாகத்தான் செல்கிறது. ஆனால் இடைவேளைக்குப் பின்பு தான் இந்த படம் மிகப்பெரிய அளவில் சூடு பிடிக்க தொடங்குகிறது. அதே நேரத்தில் இந்த முதல் 20 நிமிட காட்சியை மட்டும் வைத்துக் கொண்டு மொத்த படமே லேக் ஆகுது என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார்கள் சினிமா பார்வையாளர்கள்.

அதே நேரத்தில் இந்த படத்தில் மொத்தமே 10 கேரக்டர்கள் தான் இடம்பெற்று இருக்கிறார்கள், அந்த 10 கேரக்டர்களுமே மிக முக்கியமான கேரக்டராக வடிவமைத்துள்ள இயக்குனர் மகில் திருமேனி, ஒவ்வொரு கேரக்டர்களுக்கும் நன்றாக வாய்ப்பு கொடுத்து அருமையான திரை கதையை அமைத்துள்ளார் மகிழ்த்திருமேனி.

அந்த வகையில் இந்த படத்தில் எந்த ஒரு நடிகர்ருக்கும் முக்கியத்துவம் இல்லை என்று சொல்ல முடியாது, உச்ச நடிகராக இருக்கக்கூடிய அஜித் தன்னுடைய படத்தில் மற்ற நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், அவர் இயக்குனர் மகில் திருமேனியை அனுமதித்தது மிகப் பெரிய பாராட்டுக்குரியது என் என்கிறார்கள் சினிமா விமர்சகர்கள். அந்த வகையில் திட்டமிட்டு விடாமுயற்சி படத்திற்கு எதிராக கட்டமைக்கப்படும் போலி எதிர்ப்பு விமர்சனங்களை சுக்கு நூறாக உடைத்து வேற லெவல் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது விடா முயற்சி திரைப்படம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here