கழட்டி விட்ட அஜித், விஜய்…பிரபல இயக்குனருக்கு மறுவாழ்வு கொடுத்த சிம்பு… அஜித், விஜய் இப்படி செய்யலாமா.?

0
Follow on Google News

ஆக்சன் கலந்த கமர்சியல் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். இவர் இயக்குனராக அறிமுகமான அஜித் நடிப்பில் வெளியான தீனா மிக பெரிய ஹிட் கொடுத்து முதல் படத்திலே சாதனை படைத்தார். இவர் இயக்கத்தில் அடுத்து வெளியான விஜயகாந்த் நடித்த ரமணா படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து, யார் இந்த முருகதாஸ் என ஒட்டு மொத்த சினிமா துறையையும் தன் பக்கம் திருப்பி பார்க்க வைத்தார் முருகதாஸ்.

தொடர்ந்து வித்தியாசமான கதையை யாருடைய சாயலும் இல்லாமல், இது முருகதாஸ் படம் என பேசும் அளவுக்கு தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியிருந்தார் முருகதாஸ். இவருடைய இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியான கஜினி, 7ம் அறிவு போன்ற படங்கள் தொடர்ந்து வெற்றியை கொடுத்தது. விஜய் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான துப்பாக்கி படம் விஜய் சினிமா கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது.

இதன் பின்பு விஜயுடன் மீண்டும் முருகதாஸ் இணைந்த கத்தி ஹிட் கொடுத்தது. இதனை தொடர்ந்து விஜய்- முருகதாஸ் வெற்றி கூட்டணி என சினிமா வட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இதே கூட்டணியில் சர்க்கார் படம் வெளியானது, ஆனால் இந்த படம் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கி அரசியல் ரீதியாக பல்வேறு பிரச்சனையை சந்தித்தது. மேலும் சர்கார் படம் கதை திருட்டு கதை என்கிற அவ பெயர் முருகதாஸுக்கு ஏற்பட்டது.

இதன் பின்பு ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தர்பார் படம் படு தோல்வியை சந்தித்து, முருகதாஸ் சினிமா மார்க்கெட்டை காலி செய்தது. இந்த சூழலில் மீண்டும் சினிமாவில் தன்னை நிலைநிறுத்தி கொள்ள, ஒரு வெற்றி படம் கொடுத்தாக வேண்டும் என்கிற கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார் முருகதாஸ். இதனை தொடர்ந்து அடுத்த பட வாய்ப்புக்காக அஜித், விஜய் இருவரையும் அணுகியுள்ளார் முருகதாஸ்.

இதில் அஜித் ஆரம்பத்திலேயே முருகதாஸ் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். ஆனால் விஜய் மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் கமிட்டாகி இருப்பதாக செய்திகள் வெளியானது. அதற்கான பணிகளில் முருகதாஸ் ஈடுபட்டு வந்த நிலையில், அடுத்தடுத்து மற்ற இயக்குனர் படத்தில் கமிட்டான விஜய். இயக்குனர் முருகதாஸை கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜித், விஜய் இருவரும் முருகதாஸை கழட்டிவிட்டு நிலையில், சிம்புவிடம் கதை சொல்லி புதிய படத்தில் கமிட் செய்துள்ளார் முருகதாஸ். தற்பொழுது சிம்பு நடித்து வரும் பத்து தல இராவணன் படத்தை முடித்துவிட்டு முருகதாஸ் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் முருகதாஸுக்கு சினிமாவில் வாழ்வா.? சாவா.? என்பதால் நிச்சயம் மிக பெரிய ஹிட் கொடுப்பார் முருகதாஸ் என கூறப்படுகிறது.

ஏமாற்ற பட்ட லெஜெண்ட் சரவணன்…கோமாளியாக்கப்பட்ட பரிதாபம்… எப்படி இருக்கு லெஜெண்ட்..!