மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலன் கொலை செய்யப்படும் காட்சி தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் விதத்தில் இயக்குனர் மணிரத்தினம் அந்த காட்சியை படமாகியுள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ள நிலையில், ஆதித்ய கரிகாலன் எப்படி இறந்தார் என்கிற தகவலும் மக்கள் அறியும் வகையில் பல தமிழ் ஆராய்ச்சி ஆய்வாளர்கள் வெளிக்கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.
மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில், தன்னுடைய காதலி நந்தினி தன்னை கொலை செய்யப்போகிறார் என்பதை அறிந்து, அவருடைய ஆசையை நிறைவேற்றும் வகையில், நந்தினி கையில் தன்னுடைய கத்தியை கொடுத்து நந்தினி கையைப் பிடித்து தன் வயிற்றில் தன்னைத்தானே குத்தி ஆதித்ய கரிகாலன் தற்கொலை செய்து கொண்டது போன்று காட்சியை அமைத்திருப்பார் மணிரத்தினம்.
ஆனால் ஆதித்ய கரிகாலன் எப்படி கொலை செய்யப்பட்டார் என்பதை மறைத்து மணிரத்தினம் திரைப்படம் எடுத்திருந்தாலும், உண்மை எப்போதும் தூங்காது என்பதற்கு எடுத்து காட்டாக ஆதித்ய கரிகாலன் மரணம் குறித்த கல்வெட்டு ஆதாரங்கள் வெளியாகி, வரலாற்று படம் எடுக்கிறேன் என தமிழர்களின் வரலாற்றை கொலை செய்துள்ள மணிரத்தினம் தமிழர்களிடன் தவறான படம் எடுத்ததார்க்கு மன்னிப்பு கேட்டாலும் தகும் என்றே சொல்லலாம்.
ஆதித்திய கரிகாலன் ஒரு மாபெரும் வீரன், போர் குணம் கொண்ட அவனிடம் யாரும் கிட்ட நெருங்க கூட முடியாத அளவுக்கு போர் பயிற்சிகளை கற்று தேர்ந்தவன், இருட்டில் சண்டை போட்டால் கூட ஆதித்ய கரிகாலனை வெல்ல முடியாது. மேலும் கண்ணை கட்டிக்கொண்டு சரியான இலக்கை நோக்கி வில் அம்பு விடும் அளவுக்கு மிக பெரிய புத்திசாலியும் கூட.
அந்த காலத்தில் ஒரு விதமான கிழங்கில் அம்பை குத்தி விட்டு பின்பு அந்த அம்பை எய்தால் யார் மீது அந்த அன்பு படுகிறதோ அவர்கள் மீது விஷம் ஏறி, பாம்பு கடித்தது போன்று மரணம் அடைந்து விடுவார்கள். அப்படித்தான் ஆதித்ய கரிகாலன் கொலை செய்யப்பட்டார் என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள். ஆதித்யா கரிகாலன் கொலை செய்யப்பட்டது பின்னணியில் மிகப்பெரிய அரசியல் பின்னணி உள்ளது என்பதை வரலாற்று தரவுகள் உறுதி படுத்துகிறது.
ஆதித்ய கரிகாலனை கொலை செய்தது பாண்டிய நாட்டினுடைய ஆபத்துதவிகள் மற்றும் நம்பூதிரிகள் தான் என்றும். இதில் காந்தனுர் சாலையில் தான் நம்பூதிரிகள் ஆதித்திய கரிகாலனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்கள். அந்த இடத்தில்தான் நம்பூதிரிகள் போர் பயிற்சிகள் மேற்கொண்டுள்ளார்கள். மேலும் ஆதித்ய கரிகாலனை கொலை செய்வதற்கான சதி திட்டத்தையும் திட்டி உள்ளார்கள.
இவர்களின் ஒரே நோக்கம் ஆதித்ய கரிகாலனை கொலை செய்ய வேண்டும். மேலும் ஆதித்யா கரிகாலனை கொலை செய்த அந்த நான்கு குற்றவாளிகளுமே சகோதரர்கள், மேலும் அந்த நால்வருமே சத்திரியர்கள் இல்லை என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள். அந்த வகையில் ஆதித்ய கரிகாலனை சத்திரியர்கள் கொலை செய்யவில்லை என்பதை கல்வெட்டு உறுதி படுத்துவதாக சுட்டி காட்டும் தமிழ் ஆர்வலர்கள்.
ஆனால் பல உண்மைகளை மறைந்து கல்கி எழுதிய கற்பனை கதாபாத்திரத்தில், மேலும் பல கற்பனைகளை செய்து மணி ரத்தினம் எடுத்துள்ள பொன்னியின் செல்வன் படத்தை தமிழ் வரலாறு தெரியாதவர்கள் பார்த்தால் இது தான் ஆதித்திய கரிகாலனின் வரலாறு என தவறுதலாக அவர்கள் மனதில் பதியும் வகையில் பொன்னியின் செல்வன் படத்தை எடுத்துள்ள மணிரத்தினம் தமிழர்களிடம் தவறுக்கு மன்னிப்பு கேட்டாலும் தகும் என்கின்றனர் தமிழ் ஆய்வாளர்கள்.