பெண்களை அப்படி தான் பார்ப்பார் ஏ ஆர் ரகுமான் … போட்டுடைத்த 15 வருட நண்பர்…

0
Follow on Google News

உலக அளவில் மிக பிரபலமாக அறியப்பட்ட இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இதுவரை எந்த ஒரு கிசுகிசு சர்ச்சைகளில் சிக்காமல் மிஸ்டர் க்ளீனாக அறியப்பட்ட ஏ ஆர் ரகுமான். அவருடைய மனைவியை விட்டு பிரிவதாக அறிவித்த பின்பு அவர் குறித்து பல சர்ச்சைகளும் கிசுகிசுகளும் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஏ ஆர் ரகுமான் குறித்து வெளியாகும் சர்ச்சை மற்றும் கிசுகிசுக்கள் குறித்து ஆழமாக விசாரித்ததில் ஒவ்வொரு தகவலாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக ஏ ஆர் ரகுமான் நிற்க கூட நேரமில்லாமல் இசைப் பணியில் ரொம்ப பிசியாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் மிகப் பிரபலமான ஒருவரை திருமணம் செய்து கொண்டு பெரும் புகழ் பணம் என்று கிடைத்தாலும் கூட கணவர் தன்னுடன் அதிக நேரம் செலவிட வில்லை என்கின்ற வருத்தம் தொடர்ந்து ஏ ஆர். ரகுமானின் மனைவி சாய்ரா பானுவுக்கு இருந்து வந்துள்ளது.

இது தொடர்பாக அவர்களுக்குள் சிறு சிறு பிரச்சனைகள் இருந்திருக்கிறது. ஆனால் அந்த பிரச்சனை அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் சரியாகிவிடும். இந்நிலையில் ஏ ஆர் ரகுமான் கடந்த ஒரு வருடமாக வீட்டுக்கே வரவில்லை, மும்பை துபாய் என்று பிஸியாக இருக்கிறார், மேலும் அவர் ஒழுக்கம் குறித்த சர்ச்சையும் தற்போது எழுந்துள்ளது குறித்து உண்மையிலேயே ஏ ஆர் ரகுமான் கடந்த ஒரு வருடமாக அவருடைய மனைவியிடம் நேரம் செலவிட முடியாத அளவிற்கு பிஸியாக தான் இருந்து வருகிறார் என்பது தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில் ஏ ஆர் ரகுமான் அவருடைய மனைவியை விட்டு பிரிவதாக அறிவித்த பின்பு அவருடைய இசைக் குழுவில் பணியாற்றிய மோகினி டே அவருடைய கணவரை விட்டு பிரிவதாக அறிவித்ததால் இவர்கள் இருவரையும் இணைத்து வைத்து பல்வேறு கிசுகிசுக்கள் தொடர்ந்து வெளியே வருகிறது. அந்த வகையில் ஏ ஆர் ரகுமானுடன் சுமார் 15 வருடங்கள் பணியாற்றிய, அவர் பற்றி நன்கு அறிந்த அவருடைய நண்பர் இசை அமைப்பாளர் தாஜ் நூர், ஏ ஆர் ரகுமான் பற்றி இதுவரை வெளிவராத பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதாவது சினிமா துறை என்றாலே கிசுகிசுக்கள் இப்படி ஒழுக்கமற்றவர்கள் தான் இருப்பார்கள் என்பதற்கு விதிவிலக்கு ஏ ஆர் ரகுமான் என்றும், குறிப்பாக ஏ ஆர் ரகுமானை பார்த்து பார்த்து திருந்தியவர்கள் ஏராளம் என தெரிவித்தவர். ஒரு பாடகி உடை சரியில்லை என்றால் கூட அந்த பாடகி இருக்கும் பக்கமே திரும்பிப் பார்க்க மாட்டார் ஏ ஆர் ரகுமான், பாடல் சொல்லிக் கொடுக்கும் பொழுதும் கூட அந்தப் பாடகி பக்கம் தன் பார்வையை கொண்டு செல்லாமல் தான் பாடலை சொல்லிக் கொடுப்பார் ரகுமான்.

அந்த வகையில் ஏ ஆர் ரகுமான் இசையில் பாட போகிறோம் என்றால், ஒழுக்கமாக உடை அணிந்து செல்ல வேண்டும் என்பது அணைத்து பெண் பாடகிகளுக்கும் தெரிந்த ஒன்று. பொதுவாகவே சினிமா துறையில் இருக்கக்கூடிய பாடலாசிரியர்கள் இயக்குனர்கள் பலரும் மது அருந்தக் கூடியவர்களாக இருப்பார்கள். ஆனால் ஏ ஆர் ரகுமானுடன் பணியாற்றும் பொழுது அவர் ஸ்டூடியோக்கு வரும் பொழுது மது போதையில் அவரை அணுகினால் அடுத்து அவர்களுக்கு வாய்ப்பே இல்லை என்பது ஏ ஆர் ரஹ்மானின் முடிவு.

அதேபோன்று ஒரு இசையமைப்பாளரை தன் கைக்குள் போட்டுவிட்டு அவருடைய இசையில் அடுத்தடுத்து வாய்ப்புகளை பெறலாம் என்று தவறான ஒரு எண்ணத்தில் எந்த ஒரு பெண் பாடகியும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானை அணுகினால், அடுத்து ஏ ஆர் ரகுமான் ஸ்டூடியோ பக்கமே அந்தப் பெண் பாடகி வர முடியாது.

அந்த அளவிற்கு இசை மீது காதல் கொண்ட ரகுமான், எந்த ஒரு பெண்ணையும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கவே மாட்டார் என்றும், அந்த வகையில் மோகினி டே மற்றும் ஏ ஆர் ரகுமானை இணைத்து வைத்து வரும் அத்தனை செய்திகளும் பொய்யானவை என ஏ ஆர் ரகுமான் பற்றி நன்கு அறிந்த ஏ ஆர் ரகுமான் உடன் சுமார் 15 வருடம் பணியாற்றிய தாஜ் நூர் தெரிவித்துள்ளது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.