ஏ.ஆர்.ரகுமானுக்கு இப்படி ஒரு வெறுப்பு… மத பற்று இருக்கலாம், ஆனால் மத வெறி இருக்க கூடாது…

0
Follow on Google News

தமிழின் புகழையும் தமிழர்களின் பெருமையையும் ஆஸ்கார் மேடை வரை எடுத்துச் சென்றவர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான். இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளியான ரோஜா படத்திற்கு இசை அமைத்ததன் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அவதரித்தார். தமிழ், மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் சீன மொழி என பன்மொழியில் ஏராளமான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

ஏ ஆர் ரகுமான் சினிமா பாடல்களுக்கு மட்டுமின்றி ஏராளமான இஸ்லாமிய பாடல்களுக்கும் இசையமைத்திருக்கிறார். ஆனால், இவர் இதுவரை ஒரு இந்து பாடல்களுக்கு கூட இசையமைத்ததில்லை என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அதிலும் இந்து கடவுளை குறிப்பிடும் வகையில் வரும் பாடல்களை எல்லாம் புறக்கணித்துக் கொண்டே வந்திருக்கிறார் ரகுமான் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

இசை என்று வந்துவிட்டால், அல்லா என்றால் என்ன ஐயப்பன் என்றால் என்ன? ஆனால் ரகுமான் தொழிலில் மதவெறியை காட்டி இருக்கிறார் என்பதற்கு மிகப்பெரிய லிஸ்ட் ஒன்றே இருக்கிறது. அப்படி என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பதை இங்கு பார்க்கலாம். இசை என்று வரும்போது மொழி வேறுபாடு பார்க்காமல் தமிழில் தொடங்கி சீன மொழி வரை இசையமைத்துள்ள ரகுமான், நிறைய சந்தர்ப்பங்களில் மதவெறியால் இந்துமத பாடல்களை ஒதுக்கி வைத்து வந்துள்ளார்.

உதாரணமாக ஜோதா அக்பர் பாடல்கள், ஃபனா படத்தில் இருக்கும் சந்த் சிஃபரிஷ், சமீபத்தில் வெளியான லால் சலாம் படத்தில் கூட ஜலாலி பாடலை பாடியிருந்தார். இவை அத்தனையும் இஸ்லாமிய மதம் சார்ந்த பாடல்கள் என்பதால் மதப்பற்று காரணமாக யோசிக்காமல் பாடிய ஏ.ஆர்.ரகுமான், இதே போல் இந்து கடவுள்களுக்கும் ஓரவஞ்சனை செய்யாமல் பாடியிருந்தால் நல்லா இருந்திருக்கும்,

ஆனால் ரகுமான் அப்படி செய்யவில்லை. குறிப்பாக இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் ஐயப்பன் பாடலை மட்டும் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவில்லை. அந்தப் பாடலுக்கு பிரவீன் மணி என்பவரே இசையமைத்திருந்தார். அதையும் தாண்டி பாபா படத்தில் ரஹ்மான் இசையமைத்திருந்தாலும் உன் நடை கண்டு பாடலில் சாமி பெயரை உச்சரித்திருக்கவே மாட்டார்.அதேபோல கோமாறம் புலி பாடலில் ஐயப்பன் பெயரையும் உச்சரிக்க மாட்டார்.

நியூ படத்தில் கூட காலையில் தினமும் கண் விழித்தால் என்ற பாடலில் தெய்வம் என்ற வார்த்தையை தேவதையாக ரகுமான் மாற்றி அமைத்ததாக வாலி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவான தசாவதாரம் படத்தில் விஷ்ணுவுக்காக இரண்டு பாடல்களில் இசையமைக்க வேண்டும் என்பதால் அந்தப் படத்தையே ரகுமான் நிராகரித்திருக்கிறார்.

இவ்வாறு இந்து கடவுள் என்பதற்காகவே நிறைய படங்களை ரகுமான் புறக்கணித்திருக்கிறார் என கூறப்படுகிறது. திலீப் குமாராக இந்து குடும்பத்தில் பிறந்து இஸ்லாமிய மார்க்கத்தை தழுவிய ஏ.ஆர்.ரகுமான், இந்து கடவுளுக்கு இசை அமைக்க கூடாது என்று விடாப்பிடியாக இருப்பதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்கிற விவாதமும் தற்பொழுது எழுந்துள்ளது.

இந்நிலையில் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரார் மறைந்த கவிஞர் பிறைசூடன் கடந்த காலங்களில் ஏ ஆர் ரகுமான் தயார் பற்றி பிறைசூடன் பேசிய பழைய வீடியோ ஓன்று வைரலாகி வருகிறது, அதில் ஒரு பொது நிகழ்ச்சியில் ஏர் ஆர் ரஹ்மானை சந்தித்த போது மறுநாள் ஒரு பாடல் எழுதுவதற்காக என்னை அழைத்தார். மறுநாள் சென்ற போது, அங்கே அவரின் தாய் என்னிடம் விபூதி, குங்குமம் எல்லாம் இங்கே வைக்க கூடாதுனு சொன்னாங்க.

ஆனால், அதில் எனக்கு உடன்பாடில்லை. நான் பிறந்ததிலிருந்தே வச்சிக்கிட்டு இருக்கேன். உடன்பாடில்லை. யாருக்காகவும் வேஷம் போட விரும்பவில்லை, பின் உள்ளே சென்று ஏ ஆர் ரகுமானை சந்தித்தேன் அவர் பல்லவியை சொன்னார் நான் ரசிகா ரசிகா என பாடல் வரிகளை அவருக்கு தந்தேன் என்று பிறைசூடன் அந்த வீடியோவில் பேசியுள்ளது குறிப்பிடதக்கது.