75 லட்சம் பார்வையாளர்களை கடந்த வலிமை மோஷன் போஸ்டர்… தீபாவளிக்கு வருது திரைப்படம்…

0
Follow on Google News

வலிமை திரைப்படத்திற்கான மோஷன் போஸ்டர் இரண்டு நாட்களுக்கு முன்பு (ஜீலை 11 ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை வெளியானது. இந்த மோஷன் போஸ்டர் வெளியாகி இரண்டு நாட்களில் 75 லட்சத்திற்கும் மேலான பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த மோசம் போஸ்டரில் தல அஜித் அணிந்திருக்கும் பின் கண்ணாடியில் எதிரில் வில்லன்கள் வருவது தெரிகிறது.

இதன் பிறகு POWER IS A STATE MIND என்ற வேர்டிங்ஸ் உடன் அஜித் ஃபர்ஸ்ட் லுக்குடன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசையில் ‌ “சோனி மியூசிக் சவுத்” என்ற சோனி யூடியூப் சேனலில் சவுத் சிக்கல் மோஷன் போஸ்டர் வெளிவந்து பட்டைய கிளப்பி வருகிறது. இந்த மோஷன் போஸ்டரில் நடிகர் அஜித் ரொம்ப இருக்கிறார். இந்த மோஷன் போஸ்டரை பார்க்கும்போதே ஒரு ஹாலிவுட் ஒன்றுக்கான சண்டைக் காட்சிகள் இடம்பெற்று இருக்கும் என்று கணிக்க முடிகிறது.

இந்த படத்திலும் அஜித் பைக் ஓட்டும் காட்சி இடம் பெற்று இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மோஷன் போஸ்டர் வெளியானதற்கு அஜித் ரசிகர்கள் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து போஸ்டர் மட்டும் பிளக்ஸ் அடித்து கொண்டாடி வந்தனர். தற்போது வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை பார்த்தவர்களின் எண்ணிக்கை இரண்டு நாட்களில் 75 லட்சம் பார்வையாளர்களை தாண்டி உள்ளதால் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர். வலிமை திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.