பெண் கல்விக்கு எதிராக மதவெறி செயலில் ஈடுபடுவதா.? பொங்கி எழுந்த சரத்குமார்..

0
Follow on Google News

கர்நாடகாவில் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. பள்ளியைத் தொடர்ந்து, மங்களூருவிலும் சில பள்ளிகள் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்துள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹிஜாப் அணிவது தங்களது உரிமை என பள்ளி வளாகத்துக்கு வெளியே மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, குந்தாப்பூர், ஷிமோகா, பத்ராவதி ஆகிய இடங்களில் உள்ள அரசு பி.யூ. பள்ளிகளில் ஹிஜாப் போராட்டத்துக்குப் போட்டியாக, காவித் துண்டு அணியும் போராட்டத்தில் மாணவர்கள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நடிகர் சரத்குமார் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அரசுக்கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்த விவகாரத்தால், கர்நாடக் மாநிலத்தில் நிலவும் பதட்டமான சூழல் அதிர்ச்சியளிக்கிறது.

சமத்துவமும், நட்பும் தோன்ற ஆரம்பிக்கும் பள்ளி, கல்லூரி பருவத்தில், நாட்டின் மதச்சார்பின்மை கொள்கைகளை விதைக்க வேண்டிய தருணத்தில், மாணவ – மாணவியரிடையே மதத்தால் எழும் பிரிவினை கோஷங்கள் ஆரம்பத்திலேயே தூக்கியெறியப்பட வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமத்துவ உரிமையில் முக்கிய பகுதியான பிரிவு 15 “மதம், இனம், சாதி, பால், பிறப்பு இவற்றின் அடிப்படையில் எவரையும் பாகுபாட்டுடன் நடத்தக்கூடாது” என தெளிவாக குறிப்பிட்டிருக்கிறது.

குடிமக்களின் மத உரிமையும், ஆன்மீககுணமும் மனித தன்மையுடன் செயல்படுவதில் இருக்கிறது, அரசியலமைப்பு, வழங்கியுள்ள உரிமைக்கு எதிராக, எந்த மத உணர்வுகளையும் புண்படுத்துவது முற்றிலும் தவறு. இந்திய திருநாட்டின் கலாச்சாரத்திற்கும், மாண்பிற்கும், பெண்கல்விக்கும் எதிராக மத்துவேஷ குரல் எழுப்பி வருங்கால சமூகம் சீர்குலைவதை அரசு வேடிக்கை பார்க்காமல்,

மதவெறி செயலில் ஈடுபட தூண்டியவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கர்நாடக அரசும், ஒன்றிய அரசும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.