சினிமாவை விட்டு போகும் சூரி… யோகிபாபு வைத்த ஆப்பு… சூரியின் பேராசையால் என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

மதுரை மாவட்டத்தில் ராஜாகூர் என்கிற சிறிய கிராமத்தில் பிறந்த நடிகர் சூரி, சினிமா மீது கொண்ட மோகத்தினால் சென்னை வந்தார். கடுமையான போராட்டம், பசி , பட்டினிக்கு மத்தியில் சினிமாவில் கிடைக்கும் வேலையை செய்து வந்த சூரி, கூட்டத்தோடு கூட்டமாக பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த சூரியின் பத்து ஆண்டு போராட்டத்துக்கு பின்பு வெண்ணிலா கபாடி குழு படத்தில் மூலம் பிரபலமானார்.

இதன் பின்பு அடுத்தடுத்து கிடைத்த பட வாய்ப்புகளை தக்க வைத்து கொண்ட நடிகர் சூரி. 2011 க்கு பிறகு வடிவேலு ஆணவத்தின் காரணமாக அவருக்கு பதிலாக நடிகர் சூரியை படத்தில் ஒப்பந்தம் செய்ய தொடங்கினார்கள் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள், இதன் காரணமாக 2011ம் ஆண்டு மட்டும் 13க்கு மேற்பட்ட சூரி நடித்த படம் வெளியானது. இதன் பின்பு தமிழ் சினிமாவில் பிசியான காமெடி நடிகராக வலம் வந்தார் சூரி.

நடிகர் வடிவேலுவின் வீழ்ச்சி தான் சூரியின் சினிமாவிற்கான வளர்ச்சி என்பது மறுக்க முடியாத உண்மை. சூரியின் சினிமா வாழ்க்கை சுமூகமாக சென்று கொண்டிருந்த நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததும், சற்றும் யோசிக்காமல் ஓகே சொன்னவர், தன்னுடைய உடல் அமைப்புகளை ஹீரோவுக்கான ஒரு தோற்றம் போன்று உடல்பயிற்சி மூலம் மாற்றி கொண்டார் சூரி.

இதன் பின்பு காமெடி வேடங்களில் நடிக்க சூரியின் வைய்ப்புகள் குறைய தொடங்கியது, இருந்தும் சிறிதும் அதை பொருட்படுத்தாமல், தான் ஹீரோவாக நடிக்கும் விடுதலை படம் வெளியானதும் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகள் குவியும், தமிழ் சினிமாவில் ஹீரோவாக ஒரு ரவுண்டு வருவேன் என்கிற பேராசையில் இருந்து வந்தார் சூரி, ஆனால் விடுதலை படத்தின் படப்பிடிப்பு இரண்டு வருடமாக நடைபெற்று வருகிறது, இன்னும் படத்தை வெற்றிமாறன் முடிக்கவில்லை.

மேலும் சூரி நடித்த காட்சிகளை பார்த்த வெற்றிமாறன், இவர் ஹீரோவுக்கு செட் ஆகமாட்டார் என்ற முடிவுக்கு வந்த வெற்றிமாறன் படத்தில் அடுத்த ஒரு ஹீரோவாக விஜய்சேதுபதியை என்ட்ரி கொடுக்க வைத்து சூரி நடித்த நாட்களை விட அதிக நாட்கள் விஜய்சேதுபதியை வைத்து படப்பிடிப்பு நடத்தினர் வெற்றிமாறன். இதனை தொடர்ந்து விடுதலை படத்தின் நம்ம தான் ஒரிஜினல் ஹீரோவா.? என்கிற சந்தேகம் நடிகர் சூரிக்கு வந்துள்ளது.

மேலும் நம்மை ஹீரோ என ஆசைகாட்டிவிட்டு, நம்மை வெச்சு காமெடி கீமெடி ஒன்றும் வெற்றிமாறன் பண்ணவில்லையே என வடிவேலு நகைச்சுவை காட்சிகளில் வருவது போன்ற நிலைக்கு தள்ளப்பட்டார் சூரி. விடுதலை படத்தில் நடிக்க தொடங்கிய பின்பு பல படவாய்ப்புகளை இழந்தார் சூரி, 2020 ஆண்டு இவர் நடிப்பில் ஒரு படம் கூட வரவில்லை, சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான படங்கள் ஏதும் சொல்வது போன்று இல்லை.

அதே நேரத்தில் வடிவேலுவின் சரிவை எப்படி சூரி பயன்படுத்தி கொண்டாரோ, அதே போன்று சூரியின் சரிவை யோகிபாபு பயன்படுத்த தொடங்கியவர், தற்பொழுது கைவசம் மட்டும் சுமார் 30க்கு மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் யோகிபாபு, அதே நேரத்தில் மேலும் இவரின் அப்ரோச் பிடித்து போக, முன்னனி நடிகர்கள் படத்தில் தவிர்க்க முடியாத காமெடி நடிகரானார். ஆனால் மறுபக்கம் மீண்டும் காமெடி வேடங்களில் நடிக்க வாய்ப்புங்கள் தேடி வரும் சூரி கைவசம் விருமன் படத்தை தவிற வேறு எந்த படமும் இல்லை.

இதனை தொடர்ந்து, சினிமாவில் இனி நமக்கு வாய்ப்பில்லை என புரிந்து கொண்ட நடிகர் சூரி, தன்னுடைய சொந்த மாவட்டமான மதுரையில் பல்வேறு இடங்களில் அம்மன் உணவகம், என்கிற பெயரில் ஓட்டல் தொழிலில் கவனம் செலுத்தி வரும் சூரி, விரைவில் சினிமாவை விட்டு வெளியேறும் காலம் வந்துவிட்டது என்கிறது சினிமா வட்டாரம் மேலும், எதோ ஒரு வகையில் சூரிக்கு சினிமாவில் ஆப்பு வைத்ததில் முக்கிய பங்கு நடிகர் யோகிபாபுவுக்கு உண்டு என கூறப்படுகிறது.

தன்னை காப்பாற்ற பின்வாசல் வழியே நுழையும் ரஜினிகாந்த்… தஞ்சை பெரிய கோவிலில் என்ன இருக்கு தெரியுமா.?