வெங்கட் பிரபுவின் அடுத்த படம் 18+ காமெடி படமாம்!

0
Follow on Google News

மாநாடு வெற்றி வெங்கட் பிரபு மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா மற்றும் எஸ் ஏ சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னரே அறிவிக்கப்பட்ட இந்த படம் பல பிரச்சனைகளைத் தாண்டி நவம்பர் 25 ஆம் தேதி வெளியானது. இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றி படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுத்தந்துள்ளது. அதிலும் குறிப்பாக படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு அடுத்து இயக்கப் போகும் படத்தின் மீதான வரவேற்பு அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் அவர் ஏற்கனவே இயக்கி முடித்துள்ள மன்மத லீலை என்ற படத்தை ரிலிஸ் செய்யும் வேலைகளில் இறங்கியுள்ளாராம். அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படம் அடல்ட் காமெடி படமாக உருவாகி உள்ளதாம். மாநாடு படத்துக்கு நேர்மாறான தளத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை ரசிகர்கள் எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.