ஆடத் தெரியாமல் தெருவை கோனல்” என்பது போல் உள்ளது..! அமைச்சருக்கு பாஜக ஐடி பிரிவு மாநில தலைவர் பதிலடி…

0
Follow on Google News

புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று ஆய்வு செய்தார். பின்னர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினார் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்பது தமிழக மக்களின் ஆசை.

இதுகுறித்து தமிழக முதல்வர்தான் முடிவெடுக்க வேண்டும். பள்ளிகளில் பணிபுரிந்து வரும் சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து தமிழக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்றார். பின்னர், பல பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ளது, அவை எப்போது மேம்படுத்தப்படும் என்ற கேள்விக்கு,

‘‘பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.33 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. அதில், ரூ.31 ஆயிரம் கோடி சம்பளத்துக்கே சென்றுவிடுகிறது. எஞ்சியுள்ள ரூ.2 ஆயிரம் கோடியைத்தான் 45 ஆயிரம் பள்ளிகளுக்கும் பிரித்து கட்டமைப்பு பணிகளுக்கு வழங்கப்படுகிறது. திமுக ஆட்சியில்தான் பள்ளிக்கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது” என்றார்.

அமைச்சரின் பள்ளிக்கல்வித் துறை நிதி குறித்த கருத்துக்கு பதில் கொடுத்துள்ள பாஜக ஐடி பிரிவு மாநில தலைவர் CTR நிர்மல் குமார், தமிழக அரசு பள்ளிகளில் இன்றும் உயிர் நாடி இருப்பதற்கு முக்கிய காரணம் நமது ஆசிரியர். காவல்துறை, கல்வித்துறை போன்ற துறைகளின் மூலதனமே மனிதவளம் தான். அவர்களின் சம்பளத்தை சுட்டிக்காட்டுவது “ஆடத் தெரியாமல் தெருவை கோனல்” என்பது போல் உள்ளது என பதிலடி கொடுத்துள்ளார்.