மாநாடு படத்தின் பாலிவுட் ரீமேக்…. படக்குழு செய்த வித்தியாசமான முயற்சி!

0
Follow on Google News

மாநாடு படத்தினை பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் நடிகைகளுக்கு சிறப்புக் காட்சியாக திரையிட்டுக் காட்டியுள்ளது படக்குழு. மாநாடு படத்தின் வெற்றி சிம்புவின் மார்க்கெட்டை பல மடங்கு விரிவடைய செய்துள்ளது. இரண்டாவது வாரத்திலும் வெற்றிகரமாக மாநாடு ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் படத்தை திரையுலகினர் அனைவரும் பார்த்து பாராட்டி விட்டனர்.

தென்னிந்தியாவை பொறுத்தவரை சமீபகாலத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் பிடித்த மற்றும் லாபம் கொடுத்த படமாக மாநாடு அமைந்துள்ளது. இதையடுத்து இந்த படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்தால் மிகப்பெரிய தொகை தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் கிடைக்கும்.

அதனால் படத்தை பாலிவுட்டில் பிரபலப்படுத்த பாலிவுட் நட்சத்திரங்களுக்கு சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்து படக்குழுவினர் போட்டுக் காட்டியுள்ளனர். இந்த நிகழ்வில் சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.