மனைவி ஜோதிகா சொல்லே மந்திரம்..! சூர்யா – சிவகுமார் இடையே கடும் சண்டை..! மனைவி, குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி சூர்யா எங்கே சென்றார் தெரியுமா.?

0

ஜெய்பீம் படத்தில் வன்னியர் சமூகத்தை தவறாக சித்தரிக்கும் வகையில் இடம்பெற்றிருந்த காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது வன்னிய சமூகத்தினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து வன்னியர் பிரச்சனையில் இருந்து தப்பிக்க, பிரச்சனையை திசை திருப்ப சர்ச்சைக்குரிய அக்கினிகலசம் காலண்டர் புகைப்படத்தை இந்துக்கள் வழிபடும் லட்சுமி புகைப்பட காலண்டராக காட்சிகள் மாற்றி அமைத்தது பட குழு.

ஆனால் இந்த விவகாரம் தொடர்ந்து வன்னியர் மற்றும் நடிகர் சூர்யா இடையே என பிரச்சனை தொடர்ந்தது. அன்புமணி ராமதாஸ் சூர்யாவை நோக்கி பல கேள்வி எழுப்ப, ஆனால் சூர்யா தான் செய்த தவறை நியாய படுத்தி அன்புமணி ராமதாஸ்க்கு பதில் அளித்து சூர்யா கடிதம் எழுதி இருந்தது மேலும் வன்னியர் சமூகத்தினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

ஐந்து போலீஸ் சூர்யாவை காப்பாற்றி விட முடியாது என காடுவெட்டி குரு மகன் பகிரங்கமாக சூர்யாவுக்கு மிரட்டல் விட . இப்படி இந்த விவகாரம் முடிவுக்கு வராமல் மேலும் தொடர்ந்து கொண்டே இருந்தது. உடனே சூர்யாவுக்கு ஆதரவாக, பாரதி ராஜா. சரத் குமார், கருணாஸ் என திரைப்பட துறையினர் ஆதரவு தெரிவிக்க. இது மேலும் பிரட்சனையை பெரிதாக்கியது. இந்த விவகாரத்தில் வன்னியர் சங்கம் தீவிரம் காட்ட தொடங்கியது.

இதனை தொடர்ந்து சூர்யாவுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க களத்தில் வன்னியர் சங்கம் இறங்கியதை தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து சூர்யா மற்றும் அவரது தந்தை சிவகுமார் இடையே வீட்டில் பெரும் வாக்குவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சூர்யாவை பார்த்து சிவகுமார், நீ செய்யும் இந்த காரியம் ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்துகிறது என. தேவையில்லாமல் ஒரு சமூகத்தை நீ வம்புக்கு இழுப்பது போன்று நடந்து கொள்ளவது நல்லதல்ல என சூர்யாவை எச்சரித்துள்ளார் சிவகுமார்.

இதற்க்கு, இந்த விவகாரத்தை நான் கையாண்டு கொள்கிறேன், நீங்கள் இதை பற்றி கருத்தில் கொள்ள வேண்டாம் என சூர்யா தெரிவிக்க. உடனே கோபப்பட்ட சிவகுமார், உன்னால் ஏற்படும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் சிவகுமார் குடும்பம் என்று ஒட்டு மொத்த குடும்பமும் தான் விமர்சனம் செய்யப்படுகிறது என்று உனக்கு தெரியாத என சிவகுமார் கேட்க, எதற்கு மேல் பதில் பேசினால் பிரட்சனை பெரிதாகிவிடும் என சூர்யா அமைதியாக இருந்ததாக கூறபடுகிறது.

இதனை தொடர்ந்து குடும்பத்தில் ஏற்பட்ட பெரும் பிரச்சனையால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த சூர்யா தனது மனைவியின் ஆலோசனைபடி தற்போது சென்னையில் இருப்பது சரியில்லை என வீட்டை விட்டு மனைவி குழந்தைகளுடன் வெளியேறி குடும்பத்துடன் சூர்யா துபாய் சுற்றுலா சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தந்தை சிவகுமார் எவ்வளவு சொன்னாலும் புரிந்து கொள்ளாமல் மனைவி சொல்லே மந்திரம் என சூர்யா நடந்து கொள்வது அவரது தந்தை சிவகுமாருக்கு கவலையளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here