சும்மா… ட்ரெய்லர்க்கே இந்த பயமா.? திரைக்கு வந்தால் தங்கள் முகத்திரை கிழிக்கப்படும் என்கிற அச்சமா.? ருத்ர தாண்டவத்தை தடை செய்ய புகார்..

0
Follow on Google News

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘ருத்ர தாண்டவம்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சுமார் 4 மில்லியன் மேல் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. நடிகர்கள் ரிஷி ரிச்சர்ட், ராதாரவி, தம்பி ராமையா மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ட்ரெய்லரில் போதப் பொருட்களின் பழக்கத்தால் இளம் பெண்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அதனை காவல்துறை அதிகாரியாக உள்ள ரிச்சர் அதனை தடுப்பதுபோல் உள்ளது.

இந்த ட்ரைலரில் மதம் மாறிய ஒருவனுக்கு பிசிஆர் சட்டம் செல்லாது, சாதி இல்லாமல் மதம் மாற்ற முடியாது போன்ற வசனங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது, பிசிஆர் சட்டத்தை தவறான முறையில் பயன்படுத்தப்படுவதும், மதமாற்றம் குறித்தும்,ஒரு குறிப்பிட்ட மதத்தை இழிவு செய்கிறார்கள் என்பது போன்ற வசனங்கள் அடங்கிய ருத்ர தாண்டவம் ட்ரைலர் பார்த்தவர்களுக்கு, எப்போது இந்த திரைப்படம் திரைக்கு வரும் என்கிற எதிர்ப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ருத்ர தாண்டவம் ட்ரைலரை பொறுத்து கொள்ள முடியாத ஒரு தரப்பினர், இந்த திரைப்படம் திரையில் வெளியானால் தங்கள் முகத்திரை கிழிக்கப்படும் என்கிற அச்சத்தில், இந்த திரைப்படத்தை தடை செய்ய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது ருத்ர தாண்டவம் திரைப்படத்தை தடை செய்ய புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மை மக்கள் நல கட்சி என இதுவரை யாரும் அறிந்திராத அந்த கட்சியின் தலைவர் சாம் ஏசுதாஸ் இன்று சென்னை டிஜிபி அலுவகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார் மேலும் ருத்ர தாண்டவம் இயக்குநர் மோகன் ஜி மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்து கைது செய்வதோடு, “ருத்ர தாண்டவம்” திரைப்படத்தையும் தடைசெய்ய வேண்டும் என வலியுறுத்தி டி.ஜி.பி-யிடம் புகார் அளித்துள்ளதாகவும் சாம் ஏசுதாஸ் கூறியுள்ளார்.

இதற்கு முன்பாக இயக்குனர் மோகன் ஜி, திரெளபதி படத்தை இயக்கி இருந்தார். அந்தப் படத்தில் நாடக காதல் குறித்து பேசியிருந்தார். இந்த படம் ட்ரைலர் வெளியான போதும் மக்கள் மத்தியில் எதிர்பாப்பும் ஆதரவு இருந்தாலும் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து படத்தை தடை செய்ய பலவேறு முயற்ச்சிகளை மேற்கொண்டனர், ஆனால் அனைத்தையும் கடந்து திரைக்கு வந்து வெற்றி வாகை சூட்டியது திரௌபதி, அதே போல் திரையில் வந்து தாண்டவம் ஆடும், ருத்ர தாண்டவம் என்கின்றனர் சினிமா ரசிகர்கள்.