இன்றைய (19-08-2021) ராசி பலன்கள்.

0
Follow on Google News

மேஷம்
வாக்கு சாதுர்யத்தின் மூலம் லாபங்களை அடைவீர்கள். மனைவி வழி உறவினர்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். எதிர்பாலின மக்களிடம் நிதானத்துடன் செயல்படவும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : லாபம் உண்டாகும்.
பரணி : சாதகமான நாள்.
கிருத்திகை : தெளிவு பிறக்கும்.

ரிஷபம்
உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். வழக்கு சார்ந்த பிரச்சனைகளில் இழுபறியான சூழ்நிலைகள் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் மற்றவர்களின் மீதான கருத்துக்கள் கூறுவதை குறைத்துக்கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
ரோகிணி : கவனம் வேண்டும்.
மிருகசீரிஷம் : இழுபறியான நாள்.

மிதுனம்
ரகசியமான செயல்பாடுகள் அதிகரிக்கும். பயணங்கள் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். மனை சார்ந்த பணிகளில் லாபம் மேம்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மிருகசீரிஷம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
திருவாதிரை : நெருக்கம் அதிகரிக்கும்.
புனர்பூசம் : ஆசைகள் உண்டாகும்.

கடகம்
இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வாகனப் பயணங்களின் மூலம் லாபங்களை அடைவீர்கள். எழுத்து தொடர்பான பணியில் இருப்பவர்களுக்கு திறமைகள் வெளிப்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
புனர்பூசம் : முன்னேற்றமான நாள்.
பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
ஆயில்யம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

சிம்மம்
தந்தையிடம் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். தாய்வழி உறவினர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் நிர்வாக ஆற்றலை வெளிப்படுத்துவீர்கள். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மகம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
பூரம் : அனுகூலம் உண்டாகும்.
உத்திரம் : வெற்றிகரமான நாள்.

கன்னி
மனதில் இருக்கும் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் அமையும். தாய்மாமன் வழியில் ஆதரவான பலன்கள் உண்டாகும். வாகனம் மற்றும் வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் உழைப்புகள் அதிகரிக்கும். உறவினர்களுக்கிடையே செல்வாக்கு அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
உத்திரம் : ஆதரவான நாள்.
அஸ்தம் : சிந்தனைகள் மேம்படும்.
சித்திரை : மாற்றங்கள் உண்டாகும்.

துலாம்
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் எதிர்பாராத விரயங்கள் உண்டாகும். காது தொடர்பான உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். கல்வி தொடர்பான பணிகளில் மாற்றங்கள் உண்டாகும். குழப்பமான சிந்தனைகளும் செயல்பாடுகளில் காலதாமதமும் ஏற்படும். மக்கள் தொடர்புத்துறைகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
சித்திரை : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
சுவாதி : விரயங்கள் உண்டாகும்.
விசாகம் : அலைச்சல்கள் ஏற்படும்.

விருச்சிகம்
குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தனவரவுகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வாக்குத்திறமைகளின் மூலம் லாபம் அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
அனுஷம் : விருப்பங்கள் நிறைவேறும்.
கேட்டை : லாபகரமான நாள்.

தனுசு
எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். வியாபார பணிகளில் லாபம் அதிகரிக்கும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
மூலம் : உதவிகள் கிடைக்கும்.
பூராடம் : முன்னேற்றம் உண்டாகும்.
உத்திராடம் : புரிதல் மேம்படும்.

மகரம்
பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். தொழில் தொடர்பாக நுட்பமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். வெளியுலக அனுபவத்தின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : ஆர்வம் உண்டாகும்.
திருவோணம் : மாற்றமான நாள்.
அவிட்டம் : காலதாமதம் உண்டாகும்.

கும்பம்
உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். தெய்வீகம் தொடர்பான பணிகளில் மனம் ஈடுபடும். சகோதர, சகோதரிகளிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
சதயம் : அனுசரித்து செல்லவும்.
பூரட்டாதி : ஈடுபாடு அதிகரிக்கும்.

மீனம்
திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
பூரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.
உத்திரட்டாதி : சாதகமான நாள்.
ரேவதி : அறிமுகம் கிடைக்கும்.