அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே உச்சகட்ட பனிப்போர் நடந்து வருவதை சமீப கால நடவடிக்கைகள் வெளிப்படுத்துகிறது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என இருவருக்கு இடையே நடத்த உச்சகட்ட போரில் அதிமுக முக்கிய அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்களின் பேச்சுவார்த்தைக்கு பின்பு எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்.
இந்நிலையில் ஒ.பன்னீர்செல்வம் கை எக்காரணத்தை கொண்டும் ஓங்கி விட கூடாது என்பதில் உறுதியாக இருந்த எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து ஓபிஎஸ் க்கு எதிராக தனது அரசியல் விளையாட்டை அரங்கேற்றி வந்தார், பாஜக அமைச்சரவையில் ஒபிஸ் மகன் ஒ.பி.ரவீந்திரநாத் குமார் இடம்பெற வாய்ப்புகள் இருந்தும் அதற்கு தடையாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி, இதனை தொடர்ந்து இதுவரை அமைதியாக இருந்து வந்த ஒபிஎஸ் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் எடப்பாடிக்கு எதிராக தனது அரசியல் ஆட்டத்தை தொடங்கியுள்ளார்.
பாஜக கூட்டணி குறித்து தேர்தல் தேதி அறிவித்த உடன் பேசலாம், என ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி சக அமைச்சர் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்த போது யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிமுக-பாஜக கூட்டணியை நிகழ்ச்சி நடத்த மேடையில் உறுதி செய்தார் ஓபிஎஸ். இதனை தொடர்ந்து அடுத்து பேசிய எடப்பாடி பழனிசாமி அதிமுக-பாஜக கூட்டணியை பற்றி பேசவேண்டிய கட்டாயத்து தள்ளப்பட்டார்.
மேலும் அடுத்த சில தினங்களில் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பு வெளியானதும் ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்தது எடப்பாடி பழனிசாமிக்கு கோவத்தை ஏற்படுத்தியது, இதனை தொடர்ந்து ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்தது அவருடைய சொந்த கருத்து கட்சியின் கருத்து கிடையாது என எடப்பாடி மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் தெரிவித்தது, ஒரு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கருத்து எப்படி அவருடைய சொந்த கருத்து என் கூறலாம் என சர்ச்சை வெடித்தது.
இதனை தொடர்ந்து இன்று பிறந்தநாள் கொண்டாடும் ரஜனிகாந்த் அவர்களுக்கு ஒரு நாள் முன்பே தனது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார் ஓபிஎஸ். இந்நிலையில் ஓபிஎஸ் தெளிவாக எடப்பாடிக்கு எதிராக அரசியல் நகர்வை நகர்த்துகிறார் என கூறப்படுகிறது, இந்த பனிப்போர் சசிகலா சிறையில் இருந்து வெளியில் வரும் நேரத்தில் உச்சகட்டத்தை அடையும் என்றும், மீண்டும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இரண்டு அணியாக பிரிய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஓபிஎஸ் தலைமையிலான அணி ரஜினிகாந்த், பாஜக, தேமுதிக ,பாமக ஆகியோருடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் என்றும், எடப்பாடி பின்னால் தற்போது இருக்கும் முக்கிய அமைச்சர்கள் எடப்பாடி முதல்வர் பதவி முடிவுக்கு வருவதால் அரசியல் எதிர்காலம் கருதி பாஜக கூட்டணியில் இடப்பெறும் ஓபிஎஸ் அணியில் இடப்பெறுவர்கள் என கூறப்படுகிறது, இதனை தொடர்ந்து இரட்டை இலை சின்னம் மீண்டும் முடக்கப்பட வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தெரிகிறது, மேலும் எடப்பாடியின் அரசியல் முடிவுகள் இனி சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்ததும் தான் தெரியும் என்பதால் ஜனவரி மதத்துக்கு பின் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடக்கம் மற்றும் சசிகலா சிறையில் இருந்து வருகைக்கு பின் தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.