இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க இருக்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக சிலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அவருக்கு ஆதரவாகவும் தமிழக முளுவதும் குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது, மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டும் என பலர் வலியுறுத்தி வருகின்றனர், இதுகுறித்து சீமான் கூறுகையில், முரளிதரன் வாழ்க்கைப்படத்தை தமிழகத்திலேயே திரையிட்டு விடலாம் எனும் அளவுக்கு எண்ணம் எங்கிருந்து வந்தது?
முரளிதரன் எனும் சிங்களக் கைக்கூலியைக் கொண்டாடினால் தமிழர்களின் மனங்களிலிருந்து தூக்கி எறியப்படுவோம் என்பதை உணர வேண்டாமா? முரளிதரனின் வாழ்க்கையைக் காட்சிப்படுத்தி கொழும்பு வீதிகளில் வேண்டுமானால் திரையிடலாம். தமிழகத்தின் வீதிகளில் ஒருநாளும் அது நடக்கப்போவதில்லை என எச்சரித்தார், மேலும் இயக்குனர் பாரதி ராஜா, சேரன், நடிகர் மன்சூர் அலிகான், மற்றும் பலர் விஜய சேதுபதியை மிரட்டும் போக்கில் அறிக்கை வெளியிட்டனர்.
இந்நிலையில் நடிக்க விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு கிளம்பியிருப்பது குறித்து கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார் . முத்தையா முரளிதரன் ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரர் . சர்வதேச அளவில் அதிக விக்கட்டுகளை வென்றுள்ளார் . அவரை பற்றி திரைப்படம் எடுப்பதில் என்னை பொறுத்தவரை எந்த தவறும் இல்லை என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார் .இவரை தொடர்ந்து பலரும் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்,
பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறுகையில்,விஜய் சேதுபதி என்ற மகத்தான கலைஞன் எதில் நடிக்க வேண்டும், எதில் நடிக்கக் கூடாது என்று கட்டளையிட எவருக்கும் உரிமை இல்லை. அதிலும், ஈழ வியாபாரிகள் இது குறித்து பேசுவது அயோக்கியத்தனமானது. சந்தேகத்திற்கிடமற இது ஒரு பாசிச போக்கு. யார் எதை பேச வேண்டும், எழுத வேண்டும் என்று ஒரு கூட்டம் கட்டளையிடும் என்றால் அதை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டோர் முழுமூச்சாக எதிர்க்க வேண்டும். லைக்காவோடு கள்ள உறவு கொண்டவர்கள்தான், ஆபாசமாக கூக்குரலிடுகிறார்கள். பாசிசம் எந்த வடிவில் வந்தாலும் எதிர்க்க வேண்டும். அது நாம் நேசிக்கும் தமிழை பேசி வந்தாலும் என தெரிவித்துள்ளார்.