பேசறதில ஒரு லாஜிக் வேண்டாமா? ‘தலித்’ அரசியல் எல்லாம் இனி எடுப்படாது! ஷியாம் கிருஷ்ணசாமி பளார்..!

0
Follow on Google News

மனு தர்மம் குறித்து திருமாவளவன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மருத்துவர்.கிருஷ்ணசாமி மகன் ஷியாம் கிருஷ்ணசாமி, இது குறித்து கூறுகையில், பிராமணர்கள் உட்பட தமிழர்கள் எவரும் கண்டிராத கேட்டிராத ‘மனு, சனாதனத்தை’ எதிர்த்து காலவதியான திராவிட கருத்தியலுக்கு ஒத்து ஊத பறையர் மக்களை திரட்டும் ‘தலித்’ அரசியல் எல்லாம் இனி எடுப்படாது!

வேதம் மனு சனாதனத்தை வைத்து இந்து மதம் கட்டமைக்கப்படவில்லை. இந்திய மண்ணில் தோன்றிய வழிப்பாட்டு முறைகளே இந்து மதம், மதங்களை கடந்து பல்லாயிரம் ஆண்டுகள் உலகமெங்கும் பெண்களுக்கான உரிமை மறுக்கப்படுகிறது. அதை சீர்திருத்த இந்து மதத்தில் மட்டுமே இடம் உண்டு, சீர்திருத்தவாதிகளும் உண்டு!

இந்து என்ற மதமே கிடையாது’ – ஆனா தமிழர்களுக்கு 2000 ஆண்டுகளாக சாதி அடையாளம் கொடுத்தது இந்து மதமாம், ‘பிராமணர்கள் 2000 ஆண்டுகளாக மற்றவருக்கு சமஸ்கிரதம் கல்வி மறுத்தார்கள்’- ஆனா தமிழர்கள் சமஸ்கிரத வேதங்கள்,மனு,சனாதனத்தை பின்பற்றி வாழ்ந்தார்களாம். பேசறதில ஒரு லாஜிக் வேண்டாமா?

தன்னை தானே இரண்டாயிர வருட அடிமை என்று சொல்லிக்கொண்டு அந்த தாழ்வு மனநிலையை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் புகுத்துவதில் இந்த NGO போராளிகளுக்கு அப்படி என்ன ஆனந்தமோ? திராவிட வியாபாரிகள் பேசுவது பிழைப்பு, உங்களிடம் சுயமரியாதை வேண்டாமா? என ஷியாம் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.