இன்றைய (07-09-2021) ராசி பலன்கள்

0
Follow on Google News

மேஷம்
குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வதன் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
அஸ்வினி : லாபம் மேம்படும்.
பரணி : அனுபவம் உண்டாகும்.
கிருத்திகை : சாதகமான நாள்.

ரிஷபம்
மனதில் புதுவிதமான தெளிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோக பணிகளில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வருமானத்தை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : உற்சாகமான நாள்.
ரோகிணி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
மிருகசீரிஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

மிதுனம்
மனதில் இருந்துவந்த குழப்பங்கள் படிப்படியாக குறையும். வியாபாரம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவது தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிஷம் : குழப்பங்கள் குறையும்.
திருவாதிரை : ஆர்வம் அதிகரிக்கும்.
புனர்பூசம் : பொறுப்புகள் குறையும்.

கடகம்
குடும்ப உறுப்பினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய பொருட்கள் மற்றும் ஆடை, ஆபரணங்கள் வாங்குவதற்கு ஆர்வம் ஏற்படும். வியாபார பணிகளில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கால்நடைகள் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
புனர்பூசம் : ஆதரவான நாள்.
பூசம் : மேன்மை ஏற்படும்.
ஆயில்யம் : இழுபறிகள் குறையும்.

சிம்மம்
வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். எண்ணிய காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். மனதில் இருக்கும் சிந்தனைகளை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் திருப்தியான சூழ்நிலைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூரம் : எதிர்ப்புகளை அறிவீர்கள்.
உத்திரம் : திருப்தியான நாள்.

கன்னி
உறவுகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வாக்குவன்மையின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் பொருளாதார நெருக்கடிகள் குறையும். உயர் அதிகாரிகள் பற்றிய புதுவிதமான சிந்தனைகள் மற்றும் கண்ணோட்டங்கள் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
உத்திரம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
அஸ்தம் : நெருக்கடிகள் குறையும்.
சித்திரை : புதுவிதமான நாள்.

துலாம்
கூட்டாளிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் வழியில் சில பதற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உடனிருப்பவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
சித்திரை : ஒற்றுமை ஏற்படும்.
சுவாதி : பதற்றமான நாள்.
விசாகம் : புரிதல் உண்டாகும்.

விருச்சிகம்
தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய மாற்றங்களின் மூலம் லாபம் மேம்படும். நண்பர்களிடம் கருத்துக்களை பரிமாறி கொள்வதன் மூலம் புதிய ஆலோசனைகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். முதலீடுகள் தொடர்பான பணிகளில் தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். எதிர்பாராத வெளியூர் பயணங்களின் மூலம் புதிய அறிமுகம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
விசாகம் : லாபம் மேம்படும்.
அனுஷம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
கேட்டை : அறிமுகம் உண்டாகும்.

தனுசு
உத்தியோகம் தொடர்பான பணிகளில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். நிர்வாக பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மற்றும் அதை சார்ந்த உதவிகள் கிடைக்கும். உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகளின் மூலம் தெளிவுகள் மற்றும் முடிவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
மூலம் : முன்னேற்றமான நாள்.
பூராடம் : மேன்மை உண்டாகும்.
உத்திராடம் : தெளிவுகள் பிறக்கும்.

மகரம்
வியாபார பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் அரசு அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வதன் மூலம் ஆதரவை பெற முடியும். புதிய சிந்தனைகளை செயல்வடிவில் மாற்றும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். குழந்தைகளின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : பொறுமை வேண்டும்.
திருவோணம் : அனுசரித்து செல்லவும்.
அவிட்டம் : காலதாமதம் உண்டாகும்.

கும்பம்
உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் ஈடேறும். குடும்ப உறுப்பினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : முயற்சிகள் ஈடேறும்.
சதயம் : ஆதரவு கிடைக்கும்.
பூரட்டாதி : ஒற்றுமை அதிகரிக்கும்.

மீனம்
குறுகிய தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். உத்தியோக பணியில் உயர்விற்கான முயற்சிகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகளின் மூலம் சில மனவருத்தங்கள் நேரிடும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். சிறு மற்றும் குறுந்தொழில் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
பூரட்டாதி : மாற்றங்கள் ஏற்படும்.
உத்திரட்டாதி : அனுபவம் கிடைக்கும்.
ரேவதி : மேன்மை உண்டாகும்.