மதுரையில் சூட்சம வடிவத்தில் சிவனை வழிபட்டு வரும் சித்தர்கள்.

0
Follow on Google News

மதுரையில் மிகவும் 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆதிசிவன் வீற்றிருக்கும் இந்த சிவாலயத்தில் இன்னும் சித்தர்கள் சூட்சம வடிவத்தின் வந்து வழிபடுவதாக சொல்லப்படுகிறது. மதுரை ஆரப்பாளையம் புது ஜெயில் ரோட்டில் உள்ள மதுரா கோட்ஸ் பிரைவேட் லிமிடெட் அமைந்திருக்கும் இடத்தில் இருந்து இடது புறத்தில் அமைந்துள்ளது இந்த ஆலயத்திற்கு செல்லும் பாதை.

நுழைவு வாயிலில் எந்த ஒரு பலகையும் கிடையாது ஏனென்றால் அந்த குறுகிய சந்தில் முதலில் வருவது கிறிஸ்தவ சுடுகாடு அதைத் தாண்டி தான் இந்த சிவன் கோயில் அமைந்துள்ளது. உள்ளே நுழைந்தவுடன் குறுகிய சந்து. அந்த சந்தை கடந்து செல்லும்போது முதலில் வருவது கிறிஸ்துவ இடுகாடு பிறகு அதைக் கடந்து இடது புறமாக திரும்பி மீண்டும் வலது புறமாக திரும்பி நேராகச் செல்ல வேண்டும். இரண்டு புறங்களிலும் உயர்ந்த மதில் சுவர்களும் உயர்ந்த மரங்களும் உள்ளதால் இந்தப் பாதை கடந்து சொல்லும்போது கொஞ்சம் காட்டுக்குள் செல்லும் அனுபவம் உருவாகும். ரயில் நிலையத்தின் இடத்தில்தான் இந்த கோவில் அமைந்துள்ளது.

ஒருவழியாக கோவிலில் வந்து சேர்ந்தாச்சு. உள்ளே நுழைந்தவுடன் முதலில் இருப்பது தல விருட்சம். இந்த ஆதிசிவன் திருக்கோயிலின் தலை விருச்சகமாக அரசமரம் தான் உள்ளது. இந்த அரசமரம் மிகவும் பழமை வாய்ந்தது 800 ஆண்டுகளுக்கு மேல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அரச மரத்தை குழந்தை இல்லாத இருபத்தோரு முறை பெண்கள் சுற்றி வந்தாள் குழந்தை பாக்கியம் கிட்டுவதாக ஐதீகம் உண்டு. இந்த அரச மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்தால் ஒரு வித ஈர்ப்பு சக்தி உண்டாகும் போது ஆக இங்கு வழிபட்டு தியானம் செய்பவர்கள் கூறிவருகிறார்கள். 11 மணி அளவில் அமர்ந்திருக்கும் போது ஒருவித அசரீரி சத்தங்கள் எழுவதாக கூறப்படுகிறது. சித்தர்கள் சூட்சம வடிவத்தின் சிவனை வழிபட வருவார்கள் என நம்பப்படுகிறது.

இந்த ஆதிசிவன் ஆலயத்தில் சிவன் வில்வ வனேஸ்வரர் அம்மா மங்கள நாயகியிம் மூலக் கடவுளாக உள்ளனர். ஒவ்வொரு கோவிலிலும் சிவனுக்கும் அம்மனுக்கும் வெவ்வேறு சன்னதிகள் இருக்கும் ஆனால் இந்த ஆலயத்தில் மட்டுமே இருவருக்கும் ஒரே சன்னதியில் பூஜை புனஸ்காரங்கள் செய்யப்படும். பால விநாயகர், கன்னிமூல கணபதி, பால முருகன், தட்சிணாமூர்த்தி, தூர்க்கை, வாயுபுத்திரன் அனுமான், காலபைரவர், நவக்கிரகங்கள் பேன்ற தெய்வங்களின் சிலைகளும் உண்டு.

இந்த சுந்தரனார் என்ற சித்தர் இந்த இடத்தில் ஆதிசிவனான வில்வ வனேஸ்வரரை பிரதிஷ்டை செய்து அந்த லிங்கத்தை வழிபட்டு வந்ததாக கூறப்படுகிறது. சித்தர் வழிபட்டு வந்ததற்கானங முத்திரையும் அங்குள்ள தூணில் பதிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்தத் திருக்கோயிலில் தூண்களில் பல சின்னங்களும் பதிக்கப்பட்டுள்ளது. பசு ஒன்று சிவனுக்கு பால் கொடுப்பது போன்ற காட்சியும் மையப்படுத்தப்பட்ட உள்ளது.

இந்த திருக்கோயில் 400 ஆண்டுகளுக்கு ஒரு பழமையான தளம் என்பதற்கான பல சான்றுகளும் உள்ளன. 15 வருடத்திற்கு முன்பு வரை இடிந்த நிலையில் இருந்தது. அருகில் ரயில் நிலையம் டிப்போ தொழிலாளர்களால் 2004 ஆண்டு இந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது. இன்று வரை ரயில்வே தொழிலாளர் மற்றும் அதிகாரிகள் இணைந்து கோயிலை பராமரிப்பு செய்து வருகின்றனர். பல வரலாற்று சிறப்புமிக்க‌ விஷயங்கள் இங்கே நடந்துள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த ஆலயத்துக்கு ஒரு முறை சென்று வருங்கால்.