இன்றைய ராசிப்பலன் (13-05-2021)

0
Follow on Google News

மேஷம் : இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் சாதகமாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களின் உதவியைப் பெறுவார்கள். பெண்களுக்கு நினைத்த சில விஷயங்கள் நினைத்தபடி நடக்கும் வாய்ப்புகள் உண்டு.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அஸ்வினி : சேமிப்புகள் அதிகரிக்கும்.
பரணி : காலதாமதம் அகலும்.
கிருத்திகை : எண்ணங்கள் ஈடேறும்

ரிஷபம் : இன்றைய நாள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பொருட் தேக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பேச்சில் இனிமையை கடைபிடிக்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்பட்டால் தோல்வி நிச்சயம்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
கிருத்திகை : வேகம் அதிகரிக்கும்.
ரோகிணி : அனுகூலமான நாள்.
மிருகசீரிஷம் : வெற்றி கிடைக்கும்.

மிதுனம் : இன்றைய நாள் பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையில்லாத மனஸ்தாபங்கள் வளர்த்துக் கொள்வதை தவிர்ப்பது உத்தமம். மேல் அதிகாரிகளின் ஆதரவு குறையும். பெண்களுக்கு நினைத்தது கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.
திருவாதிரை : சிந்தனைகள் மேம்படும்.
புனர்பூசம் : ஏற்ற, இறக்கமான நாள்.

கடகம் : இன்றைய நாள் உங்கள் சக்தியையும் மீறிய உழைப்பைக் கொடுத்து முன்னேற்றம் காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு எதிரியாக இருந்தவர்களின் தொல்லை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ரீதியான வீண் விரயங்களை சந்திக்க நேரலாம். பெண்களுக்கு எடுக்கும் முயற்சியில் தடைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
புனர்பூசம் : கவனம் வேண்டும்.
பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.
ஆயில்யம் : குழப்பங்கள் மறையும்

சிம்மம் : இன்றைய நாள் தீட்டிய திட்டங்கள் இனிதே நிறைவேறும். சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் இடையேயான வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : புதுவிதமான நாள்.
பூரம் : ஈடுபாடு உண்டாகும்.
உத்திரம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்

கன்னி : இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் மனஸ்தாபம் நீங்க ஒருவரை ஒருவர் மனம் விட்டுப் பேசுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் இறை வழிபாடுகளில் அதிகமாக செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்களுடைய புத்தியை கேட்டு செயல்பட்டால் வெற்றி காணலாம். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது உத்தமம்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திரம் : ஆசைகள் நிறைவேறும்.
அஸ்தம் : மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

துலாம்: இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் இழுபறி இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நிதானத்துடன் செயல்படுபவர்களுக்கு வெற்றி நிச்சயம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய மனம் சொல்வதை கேட்டு நடப்பது நல்லது. மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். பெண்களுக்கு வேலை பளு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
சித்திரை : உத்தியோக மாற்றம் உண்டாகும்.
சுவாதி : எச்சரிக்கையுடன் செயல்படவும்.
விசாகம் : நெருக்கடியான நாள்.

விருச்சிகம் : இன்றைய நாள் தேவையில்லாத வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளின் அனுசரணையான பேச்சாற்றல் உங்களை கவரும் வண்ணம் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களை பகைத்துக் கொள்வதை தவிர்ப்பது உத்தமம். பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
அனுஷம் : அனுகூலம் உண்டாகும்.
கேட்டை : நம்பிக்கை அதிகரிக்கும்.

தனுசு : இன்றைய நாள் நீங்கள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் கூடுதல் உழைப்பு தேவைப்பட கூடிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கழுத்தை நெறிக்கும் அளவிற்கு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்த கூடிய நல்ல நாளாக அமையும். வெற்றியை காண விநாயகரை வழிபடுங்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : பிரச்சனைகள் குறையும்.
பூராடம் : எண்ணங்களை அறிவீர்கள்.
உத்திராடம் : சாதகமான நாள்.

மகரம் : இன்றைய நாள் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளித்து விடுவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நினைத்த இடத்தில் இடமாற்றம் அமையும். பழைய பாக்கிகள் வசூல் ஆகும் யோகம் உண்டு.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
திருவோணம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
அவிட்டம் : முன்னேற்றமான நாள்.

கும்பம் : இன்றைய நாள் உங்களுடைய தந்தைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணலாம். பூர்வீக சொத்துக்கள் பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தங்களுடைய திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். பெண்கள் நேர்மையாக நடந்து கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.
சதயம் : கற்பனைத்திறன் மேம்படும்.
பூரட்டாதி : சாதகமான நாள்.

மீனம் : இன்றைய நாள் குடும்பத்தில் இருக்கும் போது அவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் மன அமைதி பெறலாம். தொழில் மற்றும் வியாபார ரீதியான வர்த்தகம், பேச்சுவார்த்தை சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நினைத்ததை நடத்திக் காட்டக்கூடிய யோகம் உண்டு. கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
பூரட்டாதி : வேகம் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : பாராட்டுகள் கிடைக்கும்.
ரேவதி : ஆர்வம் அதிகரிக்கும்