இன்றைய (29-09-2021) ராசி பலன்கள்

0
Follow on Google News

மேஷம்
புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். உடன்பிறந்தவர்களின் வகையில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். குழந்தைகளின் தனித் தன்மைகளை அறிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபார பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். முயற்சிகள் கைகொடுக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
அஸ்வினி : கருத்து வேறுபாடுகள் குறையும்.
பரணி : முன்னேற்றமான நாள்.
கிருத்திகை : பாராட்டுகளை பெறுவீர்கள்.

ரிஷபம்
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் உண்டாகும். புதிய நபர்களின் நட்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். பெருந்தன்மையுடன் நடந்து கொள்வதன் மூலம் நன்மதிப்பு உண்டாகும். சந்திப்பால் மாற்றங்கள் உண்டாகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : ஆர்வம் உண்டாகும்.
ரோகிணி : மதிப்புகள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : நன்மதிப்பு உண்டாகும்.

மிதுனம்
உடனிருப்பவர்கள் பற்றி புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். மற்றவர்களுக்கு வாக்குறுதிகளை கொடுக்கும்போது சிந்தித்து செயல்படவும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகளும், அதன் சார்ந்த சிந்தனைகளும் அதிகரிக்கும். வரவுக்கேற்ற செலவுகள் உண்டாகும். பயணங்களால் அனுபவம் பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் ஏற்படும்.
திருவாதிரை : சிந்தித்து செயல்படவும்.
புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

கடகம்
எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாக நிறைவு பெறும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் நிறைவேறும். வியாபார பணிகளில் நயமான பேச்சுக்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். விவாதங்களால் நன்மையடையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
புனர்பூசம் : காலதாமதம் உண்டாகும்.
பூசம் : ஆதாயம் அடைவீர்கள்.
ஆயில்யம் : அனுசரித்து செல்லவும்.

சிம்மம்
வியாபார பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் மேம்படும். மனதில் நினைத்த எண்ணங்கள் நிறைவேறும். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். சுறுசுறுப்புடன் செயல்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மகம் : மேன்மையான நாள்.
பூரம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
உத்திரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

கன்னி
தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். வியாபார மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் அமையும். ஒத்துழைப்பு அதிகரிக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.
அஸ்தம் : இழுபறிகள் குறையும்.
சித்திரை : சாதகமான நாள்.

துலாம்
கூட்டாளிகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையின் மூலம் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் விருப்பங்கள் உண்டாகும். காப்பீடு தொடர்பான பணிகளில் தனவரவுகள் மேம்படும். சக ஊழியர்களின் மறைமுகமான உதவிகள் கிடைக்கும். மதிப்புகள் அதிகரிக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
சித்திரை : தீர்வு கிடைக்கும்.
சுவாதி : விருப்பங்கள் உண்டாகும்.
விசாகம் : உதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம்
உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். நண்பர்களின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். மற்றவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். வர்த்தகம் சார்ந்த பணிகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். வாழ்க்கைத்துணைவரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
விசாகம் : நெருக்கடியான நாள்.
அனுஷம் : பொறுமையுடன் செயல்படவும்.
கேட்டை : கவனம் வேண்டும்.

தனுசு
உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கடன் சார்ந்த பிரச்சனைகளுக்கு உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். வழக்கு சார்ந்த பிரச்சனைகளுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். எதிர்ப்புகளை வெற்றி கொள்ளும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
பூராடம் : உதவிகள் கிடைக்கும்.
உத்திராடம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.

மகரம்
கலைப்பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் எண்ணங்கள் ஈடேறும். தாய்மாமன் உறவினர்களின் வழியில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். மனதில் இருக்கும் விஷயங்களை பகிர்வதில் சிந்தித்து செயல்படவும். நெருக்கமானவர்களின் மூலம் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். விவேகத்துடன் செயல்பட வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
உத்திராடம் : ஆர்வம் அதிகரிக்கும்.
திருவோணம் : சிந்தித்து செயல்படவும்.
அவிட்டம் : நெருக்கடிகள் குறையும்.

கும்பம்
குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். வாகன பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். விவசாய பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபார பணிகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். புதுமை பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
அவிட்டம் : ஆதாயம் உண்டாகும்.
சதயம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
பூரட்டாதி : நுணுக்கங்களை அறிவீர்கள்.

மீனம்
மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உடன்பிறந்தவர்களின் வழியில் சாதகமான பலன்கள் ஏற்படும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் புதிய முயற்சிகள் ஈடேறும். மனை சார்ந்த பணிகளில் லாபம் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
பூரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.
உத்திரட்டாதி : முயற்சிகள் ஈடேறும்.
ரேவதி : லாபம் கிடைக்கும்