இன்றைய (05-01-2022) ராசி பலன்கள்

0
Follow on Google News

மேஷம்
புதிய மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். குடும்ப பெரியோர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை உருவாக்கும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அஸ்வினி : எண்ணங்கள் மேம்படும்.
பரணி : மாற்றம் ஏற்படும்.
கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.

ரிஷபம்
புதிய வியாபார நிமிர்த்தமான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். திறமைக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்களின் தன்மைகளை அறிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். மாணவர்களுக்கு கல்வி பயிலும் விதத்தில் மாற்றங்கள் ஏற்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.
ரோகிணி : புரிதல் ஏற்படும்.
மிருகசீரிஷம் : அறிமுகம் கிடைக்கும்.

மிதுனம்
உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் உங்கள் மீதான நம்பிக்கைகள் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சிலரது சந்திப்புகள் மனதளவில் மாற்றங்களை ஏற்படுத்தும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
மிருகசீரிஷம் : சோர்வான நாள்.
திருவாதிரை : சேமிப்புகள் குறையும்.
புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

கடகம்
மனதில் நினைத்த எண்ணங்கள் நிறைவேறும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். போட்டிகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு
புனர்பூசம் : எண்ணங்கள் நிறைவேறும்.
பூசம் : முதலீடுகள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : இழுபறிகள் மறையும்.

சிம்மம்
வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். பத்திரம் சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் ஏற்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். திறமைகள் வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்
மகம் : முன்னேற்றம் உண்டாகும்.
பூரம் : மேன்மையான நாள்.
உத்திரம் : அனுபவம் வெளிப்படும்.

கன்னி
குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகளும், கலகலப்பான செய்திகளும் கிடைக்கும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். இலக்கியம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் உருவாகும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். பாராட்டுகள் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : கலகலப்பான நாள்.
அஸ்தம் : திறமைகள் வெளிப்படும்.
சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.

துலாம்
கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை ஏற்படும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல் புதுவிதமான உத்வேகத்தை ஏற்படுத்தும். சுபகாரியம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் சாதகமாக நிறைவடையும். செய்கின்ற பணிகளில் லாபகரமான கண்ணோட்டங்கள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் மனதிற்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தும். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : ஒற்றுமை ஏற்படும்.
சுவாதி : சாதகமான நாள்.
விசாகம் : உற்சாகம் உண்டாகும்.

விருச்சிகம்
புதிய முயற்சிகளின் மூலம் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் அகலும். நிதானம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
விசாகம் : முடிவு கிடைக்கும்.
அனுஷம் : ஆதரவான நாள்.
கேட்டை : இழுபறிகள் அகலும்.

தனுசு
மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்களில் தெளிவான முடிவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபம் மேம்படும். விவேகமான செயல்பாடுகளின் மூலம் பலரின் ஆதரவைப் பெறுவீர்கள். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
மூலம் : முடிவு கிடைக்கும்.
பூராடம் : சிந்தனைகள் மேம்படும்.
உத்திராடம் : ஆதரவு அதிகரிக்கும்.

மகரம்
வியாபார பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பயணம் சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த தடைகள் குறையும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. ஆர்வம் அதிகரிக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
உத்திராடம் : அறிமுகம் ஏற்படும்.
திருவோணம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
அவிட்டம் : தடைகள் குறையும்.

கும்பம்
திட்டமிட்ட பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். மற்றவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோகத்தில் தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமாக வெளியூர் பயணங்கள் செல்வதற்கான சூழ்நிலைகள் அமையும். வழக்கு சார்ந்த பணிகளில் நிதானம் வேண்டும். ஆதரவு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
அவிட்டம் : எண்ணங்கள் ஈடேறும்.
சதயம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூரட்டாதி : நிதானம் வேண்டும்.

மீனம்
தனவரவுகளில் மேன்மையான சூழ்நிலைகள் காணப்படும். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். மதிப்பு உயரும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
பூரட்டாதி : மேன்மையான நாள்.
உத்திரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
ரேவதி : புத்துணர்ச்சியான நாள்.