கோடான கோடி பக்தர்கள் கலந்துகொள்ளும் மதுரை சித்திரைத் திருவிழா ரத்து…

0
Follow on Google News

கொரோனா தொற்று 2ம் அலை காரணமாக இந்த ஆண்டும் சித்திரை திருவிழாவுக்கு தடை விதித்த அரசு. மதுரையில் வருடம் வருடம் சித்திரை மாதம் எந்த நடைபெறும் திருவிழா. கடந்த ஆண்டு முதல் சித்திரை திருவிழா தடைப்பட்டு வருகிறது. இதற்கு கொரோனா தான் முக்கிய காரணம். மதுரை மய்யத்தில் அமைந்துள்ளது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் அன்னை மீனாட்சிக்கும் சுந்தரேஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடைபெறும்.

அதேபோல் மதுரை இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அழகர் கோயில். அங்கு அழகர் மழையான் மண்டூக முனிவருக்கு மோட்சம் கொடுக்க வைகை ஆற்றில் நீராடும் திருவிழாவும் நடைபெறும். இந்த இரண்டு திருவிழாவும் ஒருங்கிணைத்து இரண்டு சமய மக்களை ஒன்று சேர்த்தார் நாயக்க மன்னர். மீனாட்சி திருக்கல்யாணம் அழகர் மலையான் வருவதற்குள் முடிந்து விடுகிறது. தங்கை திருமண நிகழ்வுகளை காண வருவதற்குள் திருமணம் முடிந்து விடுகிறது இந்த கோபத்தால் ஆற்றைக் கடக்காமல் நீராடிவிட்டு அழகர் மலைக்கு சென்றுவிடுகிறார்.

இப்படி மக்களை ஒன்று சேர்க்க இரண்டு திருவிழாவையும் ஒன்று சேர்த்தார் நாயக்க மன்னர். அதான் படி வருடம் வருடம் சித்திரை திருவிழா தடை இல்லாமல் நடைபெறும். கோடிக்கணக்கான பக்தர்கள் திருவிழாவை காண வருவார்கள். பட்டி தொட்டியில் உள்ள கிராம முதல் வெளிநாட்டவர்கள் வரை கோடிக்கணக்கில் இந்த திருவிழாவை காண வருவார்கள். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவுவதால் கோவில் வளாகத்துக்குள்ளேயே திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதை மக்களுக்கு தொலைக்காட்சியின் மூலம் ஒளிபரப்பினார்கள். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கம் கொஞ்சம் குறைந்திருந்தது. இந்த ஆண்டாவது சித்திரைத் திருவிழா நடைபெறும் என்று பக்தர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். அழகர் ஆற்றில் இறங்குவதற்காக பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால் இந்த மாதம் முதல் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. இதற்காக மத்திய மாநில அரசுகள் சில கட்டுப்பாடுகளும் விதித்தது. பொது நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாவுக்கு அனுமதியை ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழா மதுரை கலெக்டர் ரத்து செய்யப்பட்டது என்று செய்தி வந்ததால் பக்தர்கள் இந்த வருடமும் மீனாட்சி திருக்கல்யாணத்தை காண முடியாமல் போனதால் வருத்தத்தில் ஆழ்ந்து உள்ளனர்.