பில்லி சூனியம் ஏவல் தடங்கள் நீங்க மதுரை பாண்டி முனீஸ்வரரை வழிபடுங்கள்.

0
Follow on Google News

மதுரை ஆண்ட பாண்டிய மன்னன் இன்று மதுரை மக்களால் காவல் தெய்வமாக வணங்கப்பட்டு வருகிறார். அவர் வேற யாரும் இல்ல நம்ம பாண்டி முனீஸ்வரர் தான். மிகவும் உக்ரமான துடிப்புடன் வணங்கக்கூடிய ஒரு கடவுள்தான் பாண்டி முனீஸ்வரர். முதலில் பாண்டி முனீஸ்வரர் வரலாற்றை பார்ப்போம் வாங்க: கண்ணகி மதுரையை எரித்த கதையை எல்லாரும் கேள்விப்பட்டிருப்பீங்க. ஆனால் கண்ணகி கணவன் கோவலனுக்கு தவறான நீதி வழங்கிய பாண்டிய மன்னன் என்ன ஆனாரு தெரியுமா?

பாண்டிய மன்னர்கள் நீதிக்கு கட்டுப்பட்டவர்கள். மக்களுக்கு சரியான ஆட்சி கொடுத்து வந்தவர்கள் தமிழ் கலாச்சாரத்திலும் வீரத்திலும் பெயர் போனவர்கள் பாண்டிய மன்னர்கள். இப்படி பெருமை கொள்ளும் அளவிற்கு இருந்த பாண்டியர்கள் குலம், பாண்டியன் நெடுஞ்செழியன் கண்ணகிக்கு வழங்கிய தவறான நீதியால் அளிந்தது. பாண்டியன் நெடுஞ்செழியன் தவறான நீதியால் தன் கணவன் இழந்த கண்ணகி மதுரையை எரித்தால். நீதி தவறிய பாண்டிய மன்னர் உயிர் துறந்தார்.

இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வள்ளியம்மாள் – பெரியசாமி என்ற தம்பதியர் கரூரிலிருந்து மதுரைக்கு குடிபெயர்ந்து வந்தனர். வரும் வழியில் தற்போது உள்ள மாட்டுத்தாவணி பாண்டி கோயில் அருகில் அமர்ந்து உள்ளனர். நீண்ட பயணத்தால் தம்பதிகளின் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர் அப்போது வள்ளியம்மாள் கனவில் முனிவர் தோற்றத்தில் ஒருவர் வந்து நான் தான் பாண்டியன் நெடுஞ்செழியன் கண்ணகிக்கு வழங்கிய தவறான நீதியால், மறுபிறவி எடுத்து ஈஸ்வரனை தியானித்து வருகிறேன்.

நீங்கள் உறங்கிக் கொண்டிருக்கும் இடத்தில் சில அடிகளில் என்னுடைய சிலை உள்ளது. எனி மீட்டெடுத்து வழிபட்டு வந்தாள் மீண்டும் மறுபிறவி எடுத்த பாண்டியன் நெடுஞ்செழியன் பாவத்தின் நிவர்த்தியாக ஈசனை நோக்கி எட்டடி மண்ணுக்குள் தியானம் செய்வதாக தன்னை மீட்டெடுத்து வழிபட்டு வந்தால் அவர் குடும்பத்தை செல்வம் செழிப்பாக வைப்பதாக வயதான முனிவர் கூறினார். அதிர்ச்சியில் நடந்த விஷயத்தை கணவன் பெரியசாமியிடம் கூற இருவரும் சோர்ந்து தோண்டியபோது மண்ணுக்குள் 6 அடி உயரத்தில் முறுக்கு மீசையுடன் உக்கிர பார்வையுடன் சிலையை வெளியே எடுத்தனர்.

அப்போது தான் அவர்களுக்கு கனவில் தோன்றியது உண்மைதான் என்று. பிறகு அங்கு உள்ள மரத்தடியில் வைத்து பாண்டி முனீஸ்வரரை வழிபாட்டு வந்தனர். பெரியசாமி வள்ளியம்மாள் குடும்பத்தினர் தான் தற்போது வரை வாரிசு வாரிசாக பூஜை செய்து வருகின்றனர். இது தான் மதுரை சொல்லப்படும் பாண்டி முனீஸ்வரர் வரலாறு. மரத்தடியில் இருந்த பாண்டி முனீஸ்வரருக்கு ஆலையம் எழுப்பி அங்கு வைத்து வழிபட்டு வருகின்றனர். இப்போ மதுரை மக்களின் காவல் தெய்வமாக இருக்கிறார் பாண்டி முனீஸ்வரர்.

இக்கோயிலில், பாண்டி முனீசுவரர் மூல கடவுளாக வழிபடப்படுகிறார். மேலும் விநாயகர், சமய கருப்பசாமி, ஆண்டிச்சாமி, சுப்பிரமணியர் ஆகியோர் உப கடவுளர்களாக அமைந்துள்ளனர். மதுரை மட்டும் அல்ல தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் இங்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். மதுரை மாட்டுத்தாவணி கோரிப்பாளையம் இருந்து மிக அருகில் உள்ளது. இங்கு அக்னீஸ்வரர் ஆலயத்தில் வரிசையில் நின்று உள்ளே செல்லும்போது கருத்தோடு ஒரு பார்க்கும் காட்சி நம் குடும்பத்திற்கு ஏற்பட்ட பில்லி, சூனியம், ஏவல், தடங்கள் போன்ற அனைத்தையும் பொடிப் பொடியாக்கி கேட்டதை கொடுக்கும் முனீஸ்வரருக்கு தினம் தோறும் கிட வெட்டி கொண்டாடி வருகின்றனர். நீங்களும் குடும்பத்துடன் மறக்காம வழிப்பட்டு செல்லுங்கள்.