நாடு ஏற்கனவே பயங்கரவாதத்தால் இரண்டு பிரதமர்களை இழந்திருக்கையில், பாகிஸ்தான் எல்லையில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில், பிரதமர் 20 நிமிடங்கள் வரை ஒரே இடத்தில் நிறுத்தவைக்கப்பட்டது மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் விஷயம். இதை பல மூத்த காங்கிரஸ்காரர்களே கூறிவிட்டனர். அந்த பரபரப்பு காட்சிகளும் தற்போது வெளியாகி இருக்க, பிரதமரை அன்று அங்கு, கண் இமை போலவும், கர்ணனின் கவசம் போலவும் காத்து நின்றவர்கள் மீது, தற்போது மக்களின் பார்வை திரும்பியுள்ளது.
கோட்டு சூட்டுடன் துப்பாக்கி..? சிலர், கையில் ஏதோ File-லையும் வைத்துள்ளனர்..!! பாதுகாவலர்களா? அதிகாரிகளா? யார் அவர்கள்? அவர்கள் தான்.. “SPG” எனப்படும் Special Protection Group.. நாட்டில் முக்கியஸ்தர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு என்று பாதுகாப்பு அடுக்குகள் உள்ளன. X பாதுகாப்பு, Y பாதுகாப்பு, Y plus பாதுகாப்பு, Z பாதுகாப்பு, Z plus பாதுகாப்பு மற்றும் SPG. இதில் SPG பாதுகாப்பு என்பது, பிரதமருக்கும் பிரதமரின் முதல்மட்ட குடும்பத்திற்கும் மட்டுமே வழங்கப்படுகிறது.
நாட்டின் Elite படையாக பார்க்கப்படும் இந்த SPGயில், சுமார் 3 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். Secret Service of America போல பயிற்சி அளிக்கப்படும் இவர்களிடம் FNF-2000 Assault Rifle, FN P90, FN Herstal Five-seven, Glock 19, IOF Modern Sub Machine Carbine போன்ற அதிநவீன துப்பாக்கிகள் இருக்கும். இவற்றில், FNF-2000 Assault Rifle, FN P90, IOF Modern Sub Machine Carbine போன்றவை, நிமிடத்துக்கு சராசரியாக 900 குண்டுகளை சரசரவென பாய்ச்சி சுடக் கூடியவை. Glock 19-னோ நிமிடத்துக்கு 1,100 முதல் 1,200 குண்டுகள் வரை பாய்ச்சி சுடக் கூடியது.
அதேபோல அவர்கள், கருப்பு நிறத்தில் மெலிதான Suit case போன்ற ஒன்றை எடுத்துச் செல்வர். அது, File-களை கொண்டிருக்கும் office Suit case அல்ல. அது portable folded ballistic shield. அதாவது, bullet proof shield. பிரதமரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டால், அதை சரசரவென கேடயம் போல் விரித்து, துப்பாக்கிச் சூட்டில் இருந்து பிரதமரை அவர்கள் காப்பர்.
யாரை கவனிக்கிறார்கள் என்பது வெளியே தெரியாமலிருக்க, அவர்கள் எப்பொழுதுமே கருப்பு நிற கண்ணாடியையும் போட்டிருப்பார்கள். அவர்கள் போட்டிருக்கும் Shoe மற்றும் gloves, அவர்கள் எந்த இடத்திலும் Slip ஆகாதவாறும், ஆயுதங்கள் அவர்களது கையில் இருந்து நழுவாமல் இருக்கவும் உதவுகிறது. அவர்கள் பெரும்பாலான நாட்களில் கோட் சூட் தான் போடுவார்கள். கோடை காலத்தில் வெப்பம் ஏறாமல் இருக்க Safari உடை அணிவர்.
அதேபோல பிரதமரின் வாகன cavalcade-டையும் இவர்களே கையாள்வார்கள். அதன்படி, இரண்டு Armoured BWW 7 Series Sedan, ஆறு BMW X5, ஒரு Mercedes Benz ambulance, Toyota Cruiser (க்ரூய்ஸர்), புதிதாக வாங்கப்பட்ட Mercedes-Benz Maybach S 650 மற்றும், 100 மீட்டர் வரை பொருத்தப்பட்டுள்ள வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் antenna (ஆண்டனா) பொருந்திய Tata Safari Jammer ஒன்றும் செல்லும். இந்த கார்கள் அனைத்தும், Bullet proof கொண்டவை. துப்பாக்கிச்சூடு மட்டுமின்றி Grenade தாக்குதலால் கூட காருக்குள் இருப்பவரை தாக்க முடியாத அளவுக்கு அந்த கார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், அவற்றின் tyre-கள் முற்கம்பிகளால் Puncture செய்யப்பட்டால் கூட கிட்டத்தட்ட 320 கிலோ மீட்டர் தூரம் வரை, மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்திற்கு குறையாமல் செல்லும் அளவிற்கு அமைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் SPG-யின் முழு கட்டுப்பாட்டிலேயே இயங்கும். SPG-யுடன் NSG படைகளும் இருக்கும். இவர்களும் SPG-யின் உத்தரவுப்படியே நடப்பார்கள்.
பிரதமரின் வெளிநாட்டுப் பயணம் என்பது முழுவதும் விமானப்படையால் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பயணத்திற்கு முன்பும், அங்கு முன்னரே சென்று இடத்தையும் ஆய்வு செய்வர். பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு மட்டும் பிரத்தியேகமாக அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட Air India One விமானம் செயல்படும். அதில் அதிகாரிகளுடன் SPG மற்றும் NSG படைகளும் இருப்பார்கள். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், இத்தனை சிறப்புகளுடன் இயங்கும் இந்த SPG-யே, நிஜ “காப்பான்”.—– நன்றி, அருண் –