பஞ்சாப் : 1857ம் ஆண்டு நடந்த நாட்டின் முதல் விடுதலைப்போரில் பங்கேற்ற 282 இந்திய வீரர்களின் எலும்புக்கூடுகள் அமிர்தசரஸ் அருகே நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டதாக பஞ்சாப் பலக்லைக்கழக உதவி பேராசிரியர் டாக்டர் ஜெ.எஸ்.செஹ்ராவத் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்திய வீரர்கள் தோட்டாக்களில் மாட்டிறைச்சி மற்றும் பன்றிகளின் இறைச்சிகளை பயன்படுத்துவதற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டதால் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் அவர் கூறுகையில் ” இந்திய வீரர்களின் எலும்புக்கூடுகள் 1857ல் பரங்கித்தலையர்களுக்கு எதிரான முதல் விடுதலைப்போரில் பங்குபெற்று கொல்லப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்த வீரர்கள் பண்டிகளின் இறைச்சிகள் மாட்டு இறைச்சி ஆகியவற்றை துப்பாக்கி தோட்டாக்களில் பயன்படுத்துவதை எதிர்த்து கிளர்ச்சி செய்துள்ளனர் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. நாணயங்கள் பதக்கங்கள், பகுப்பாய்வு, ரேடியோ கார்பன் டேட்டிங் ஆகிய முடிவுகளும் அதைநோக்கியே உள்ளன. 1857 நடந்த இந்த கிளர்ச்சி வரலாற்றாசிரியர்களால் முதல் சுதந்திர போற என அழைக்கப்படுகிறது” என உதவி பேராசிரியர் செஹ்வாத் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் அமிர்தசரஸ் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அகழ்வாராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பரங்கித்தலையர்களால் கொல்லப்பட்ட பல இந்திய வீரர்களின் எலும்புக்கூடுகள் இன்னும் கிடைக்கலாம் என எதிர்பார்க்கபப்டுகிறது.