மதுரையில் இருந்து மேலூர் செல்லும் வழியில் அரிட்டாபட்டி என்னும் கிராம் உள்ளது. இங்கு ஏழு மலைகள் உள்ளன அதில் கலிஞ்சா மழையில் தான் குடைவரை சிவன் கோயில் உள்ளது. குடைவரை சிவன் கோயில் பாண்டிய மன்னர்களால் காலகட்டத்தில் மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட கோயிலாகும். இந்தக் குடவரைக் கோயிலில் உள்ள சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்படவில்லை மலையைக் குடைந்து கோயில் உருவாக்கும்போது அங்கேயே அந்த சிவலிங்கமும் பாறைகளால் செதுக்கி உருவாக்கப்பட்டது. மன்னர்கள் வழிபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்தக் கோவிலில் ஒரு பிள்ளையார்பட்டியில் உள்ளது போன்ற கற்பக விநாயகர் சிலை உள்ளது. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை உருவாக்குவதற்கு முன்பு இந்த அரிட்டாபட்டியில் தான் முதன் முதலில் கற்பக விநாயகரை உருவாக்கியதாக சொல்லப்படுகிறது. இங்கே லகுலீசர் தோற்றத்தில் சிவன் காட்சி தருகிறார். லகுலீசர் தோற்றத்தில் முக்கிய அம்சமாக பார்க்கப்படும் இரண்டில் ஒன்று மதுரை அரிட்டாபட்டியில் தான் உள்ளது.
இந்தக் கோவில் அமைந்திருக்கும் மலையின் மற்றொரு பக்கம் சமணர் படுக்கைகளும் உள்ளது. குடைவரைக் கோயிலில் உள்ள சிவனை சித்தர்கள் இன்றளவில் கண்டு வழிபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த மலைக்கு பின் புறத்தில் வேற்றுகிரகவாசிகள் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. பிரமிக்க வைக்கும் அற்புதங்களைக் கொண்ட இந்த அரிட்டாபட்டி குடைவரை சிவன் கோயிலை நீங்களும் உங்க குடும்பத்தோட தரிசித்துவிட்டு வாருங்கள்.