இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் உத்தர்காண்ட் மாநில பிறப்பு, படித்ததெல்லாம் ராணுவபள்ளி அதை தொடர்ந்து ஐபிஎஸ் முடித்து கேரளாவில் 70களில் பணிதொடங்கினார். அவரின் தந்தையும் ஒரு ராணுவத்தார். 1975க்கு பின் அவரின் சாகச வாழ்வு தொடங்கிற்று, சிக்கிமினை கைபற்ற அமெரிக்காவும் சீனாவும் பல நாடகங்களை நடத்தியபொழுது, தேர்ந்த ராஜதந்திரியாக செயல்பட்டு அதை இந்தியாவோடு இணைத்தவர் அஜித் தோவால், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அந்த சாகசத்தில் தோவலுக்கு பெரும் இடம் கொடுத்தார்.
1980களில் உளவாளியாக மிசோரம் மாநில சக்திகளுக்குள் ஊடுருவி அவர்களை நம்ப வைத்து, பர்மாவில் இருந்த அவர்களின் வேர்வரை கண்டறிந்து இந்திய அரசுக்கு தெரியபடுத்தி அஜித் தோவால் தப்பி வந்ததெல்லாம் மாபெரும் சாசகம், அதுவும் அவர்களுக்கு தன்னுடைய பிராமண மனைவியினை பன்றிகறி சமைக்க வைத்து நம்பவைத்த சாகசமெல்லாம் தனிரகம். அங்கே மிசோர் எனும் எதிரிகளின் இயக்கத்தில் ஊடுருவி அவர்களை குழப்பி அவர்களை ஒழித்து கட்டியது இன்றும் உளவுதுறையின் பாடமாக திகழ்கிறது.

இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது அஜித் தோவலை பல ரகசிய ஆப்ரேஷன்களுக்கு பயன்படுத்தினார். அதாவது இந்திரா படுகொலைக்கு பின்னும் காலிஸ்தான் அடங்கவில்லை, 1986 மற்றும் 1988ல் பொற்கோவிலை கைபற்றி மறுபடியும் சவால் கொடுத்தார்கள், இந்திராவே இல்லா நிலையில் டெல்லி தலைமை பீடம் அஞ்சியது, பொற்கோவிலுக்குள் என்ன நடக்கின்றது என தவியாய் ராணுவம் தவித்த நிலையில் களத்துக்கு வந்தார் அஜித் தோவால்.
ரிக்சாகாரன் வேடத்தில் சுற்றி காலிஸ்தான் இயக்கத்தில் தான் பாகிஸ்தான் உளவாளி என ஊடுருவி, அவர்கள் பஞ்சாப் கோவிலை முற்றுகையிட்டிருந்த பொழுது கோவிலுக்குள் சென்று உளவு பார்த்து இந்திய ராணுவத்துக்கு தகவல் சொன்னதெல்லாம் மாபெரும் தேசிய சேவை, உள்ளே இருந்த 200 எதிரிகள் இருப்பதை பார்த்து வந்த அஜித் தோவல், அவர்களுக்கு நீரும் மின்சாரமும் கிடைக்கா வகையில் அவர்களை மடக்கி ஆப்ரேஷன் பிளாக் தண்டரை வெற்றிகரமாக நடத்தி கொடுத்தார்,
இந்தியா அவரை கொண்டாடியது, பாகிஸ்தான் வெறுப்பாக பார்த்தது பின்னாளில் காலிஸ்தான் அவரை குறிவைத்து தேடியும் சிக்கவில்லை பஞ்சாபுக்கு பின்பே காஷ்மீருக்கு வந்தார் தோவல், அங்கும் ஊடுருவி சில சில்லறை இயக்கங்களை நடத்தி பெரும் தகவலை கொண்டுவந்தார், இந்தியாவுக்கு காஷ்மீர் தீவிரவாதத்தை முழு வடிவமாக காட்டி கொடுத்தவர் அவரே, இன்னும் ஆழமாக உளவு பார்க்க பாகிஸ்தானில் 8 ஆண்டுகள் உளவாளியாக அவர் பணியாற்றியது இன்றும் பாகிஸ்தானியராலே ஜீரணிக்கமுடியா விஷயம்
ஆம் அவர் இஸ்லாமியராக மாறி, பாகிஸ்தானி பெண்ணையே மணமுடித்து மகா கில்லாடிதனமாக உளவுபார்த்து தகவல் சொன்னார். அந்த வகையில் ரவீந்திர கவுசிக்கும் தோவலும் மகத்தானவர்கள், மிகபெரிய சவாலை உயிரை பணயம் வைத்து எடுத்தவர்கள். ஆனால் கவுசிக் சிக்கி கொண்டார் தோவல் சிக்கவில்லை. எனினும் கவுசிக் கைதுக்கு பின் உஷாரான பாகிஸ்தான் தோவலையும் கைது செய்யும் வாய்ப்பு இருந்தது காரணம் கம்மல் அணிந்த அதாவது காதுகுத்திய வடு தோவல் காதில் இருந்தது.
இதை பார்த்த சில பாகிஸ்தானியருக்கு சந்தேகம் வருமுன், தோவல் ஒரு இந்து எனும் சந்தேகம் வரும் முன் தன் காதையே பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மாற்றினார், அட்டகாசமான வித்தை இது. அதன்பின் பாகிஸ்தானில் இருக்கும்வரை அவருக்கு சிக்கல் இல்லை பாகிஸ்தானின் உருது மொழியினை எல்லா ஸ்லாங்கிலும் பேசியது மகா ஆச்சரியம்
பாகிஸ்தானின் அணுமையங்கள் உள்ளிட்ட எல்லா தகவலையும் திரட்டி வந்தவர் அவர்தான், ஆனால் இந்திராவுக்கு பின் வலுவான தலைமை இல்லாததால், இஸ்ரேல் பாணியில் பாகிஸ்தான் அணுவுலைகளை தகர்க்கும் வேகம் இந்தியாவுக்கு இல்லை. அவ்வகையில் தோவலின் உழைப்பு வீணானது, ஆனாலும் பாகிஸ்தானில் மாபெரும் உளவு வலையினை பின்னி வைத்தார் தோவல், அந்த வலை இன்றும் உண்டு, அஜித் தோவல் ஏற்படுத்தி வைத்ததே பலுசிஸ்தான் சிக்கல்
இன்று பாகிஸ்தானின் மிகபெரிய சிக்கலாகவும் தற்பொழுது அத்தேசம் உடையும் அளவுக்கு பலுசிஸ்தானில் இந்திய பிடியினை இறுக்கி வைத்தவர் தான் அஜித் தோவல், 80 வயதில் சுமார் 56 வருடங்கள் பாதுகாப்பு பணியில் நீடித்துகொண்டிருக்கும் அஜித் தோவல் சாதனை சாதாரணம் அல்ல, இன்னொருவனுக்கு இந்த அபார உழைப்பும் அர்பணிப்பும் சாத்தியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நம்முடைய தேசம் பாதுகாப்பாக இருக்கிறது என்றால் அதற்கு காரணமான அஜித் தோவல் பற்றி ஒவ்வொரு இந்தியனும் தெரிந்து கொள்ள இந்த வீடியோவை சேர் செய்யுங்கள்.