திமுக தேர்தல் பிரச்சாரத்தில் திமுக எம்பி ஆ.ராசா பேசுகையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் நல்ல உறவில் பிறந்தவர் என்றும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கள்ள உறவில் பிறந்தவர் என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார், இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்தது, தமிழக்தில் பல்வேறு இடங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தாயாரை இழிவு படுத்திய அ.ராசா புகைப்படத்தை பெண்கள் செருப்பால் அடித்து ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஆ.ராசா பேச்சுக்கு திமுக தரப்பில் இருந்தும் கண்டனம் பதிவானது, திமுக எம்பி கனிமொழி தனது கண்டன பதிவில், அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவு படுத்தி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது. இதை எல்லோருமே மனதிலே வைத்துக்கொண்டால் இந்த சமூகத்திற்கு நல்லது. இதுதான் திராவிட இயக்கமும் பெரியாரும் விரும்பிய சமூகநீதி ஆகும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னை, திருவொற்றியூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி, தனது தாயாரை இழிவாகப் பேசியதாகக் குறிப்பிட்டு கண்கலங்கினார். சிறிது நேரம் பேச முடியாமல் தலை கவிழ்ந்து நின்ற அவர், பிறகு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேசினார். என் தாய் கிராமத்தில் பிறந்தவர், விவசாயி, இரவு பகலாகப் பாடுபட்டவர். அவர் இறந்துவிட்டார். அவரைப் பற்றி இழிவாக, தரக்குறைவாக எப்படியெல்லாம் பேசினார்.
இன்றைக்கு ஒரு முதல்வருக்கே இப்படிப்பட்ட நிலை என்றால் சாதாரண மக்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பது? ஏழையாக இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும் தாய் என்பவர்தான் உயர்ந்த ஸ்தானம். யார் தாயை இழிவாகப் பேசினாலும் ஆண்டவன் நிச்சயமாகத் தகுந்த தண்டனை வழங்குவான்” என முதல்வர் பழனிசாமி பேசினார்.இது பெண்கள் மத்தியில் முதல்வர் மீது அனுதாபத்தை ஏற்படுத்தி தந்தது.
இதே போன்று அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் நடிகை விந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார், அதில், ராசாவே, கள்ளபிறப்பை பற்றி கனியிடம் கேள். தான்பெற்ற கனிமொழியை தன் மகள் இல்லை என மறுத்தது யார்! போன தேர்தல்ல ராசாவின் கை நீண்டது திமுக தோற்றது இந்த தேர்தல்ல வாய் நீளுது டெப்பாசீட்கூட வாங்காது. முதல்வர்அம்மா, முதல்வரின் அம்மா என தாய்குலத்தை இழிவுபடுத்தும் திமுகவை துரத்திஅடிப்போம் என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.