அத்திப்பழங்களில் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. அத்தி மரத்தின் இலை, காய், பழம், பால, பட்டை போன்ற அனைத்தும் ஆரோக்கிய பலன்களை கொண்டன. அத்திப்பழங்கள் மிகவும் சுவையாக இருக்கும். நம்முடைய உடலுக்கு ஆரோக்கியமானது. அத்தி பழங்களில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி, வைட்டமின் கே, பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, காப்பர், ஜிங்க், மான்கனீஸ், உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் விட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளன.
அத்திப்பழத்தில் உலர்ந்த அத்திப்பழத்தில் தான் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. தினம் 2 முதல் 3 உலர்ந்த அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் பல பலன்களை அளிக்கிறது.உலர்ந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, மிக குறைந்த கலோரிகள் தான் உள்ளது. எனவே குறைந்த கொழுப்பு உள்ளதால் இந்த பழத்தை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்காது. மிகவும் முக்கியமான ஒன்று தான.
அத்திப்பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. நம் இதய நோய்க்கு அரணாக, சரும பிரச்சனைகளை தீர்க்க, சிறுநீரக கற்கள் நீங்க, குறைந்த கொழுப்பு, ரத்த அழுத்தம் மற்றும் ரத்த குறைவு, என மேலும் பல நன்மைகள் நிறைந்துள்ளது இந்த பழத்தில். இப்படி பல சத்துக்கள் நிறைந்துள்ளன அத்திப்பழத்தை தினம் உட்கொண்டு வருவதால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்