நள்ளிரவு முதல் மாரிதாஸ் வீட்டை சுற்றி போலீஸ் குவிப்பு.! கைதாகிறாரா எழுத்தாளர் மரித்தாஸ்.?

0
Follow on Google News

பிரபல எழுத்தாளர் மாரிதாஸ் தொடர்ந்து திமுகவுக்கு எதிராக ஜனநாயகப்படி விமர்சனம் செய்து வரக்கூடியவர், அதே நேரத்தில் பிரதமர் மோடி மற்றும் பாஜகவுக்கு ஆதரவாக தொடர்ந்து மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் பணியை சிறப்பாக செய்து வரக்கூடியவர். மரித்தாஸ் வெளியிடும் வீடியோக்கள் இதற்கு முன்பு பல்வேறு மாற்றங்களை உருவாக்கியுள்ளது, தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் எனும் திமுகவின் தொடர் முயற்சி தோல்வியை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தால் மாரிதாஸ் உட்பட சிலர் கைது செய்யப்படுவார்கள் என திமுகவினர் சவால் விடுத்து வந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்து ஆறு மாதமாகியும் இதுவரை மாரிதாஸ் மீது வலுவான குற்றசாட்டு இல்லாத காரணத்தினால் கைது செய்ய முடியாமல் தவித்து வருகிறது திமுக அரசு. இந்நிலையில் நேற்று இரவு சுமார் 12 மணியில் இருந்து எழுத்தாளர் மாரிதாஸ் வீட்டின் முன்பு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மாரித்தாஸ் தரப்பில் இருந்து அங்கே குவிக்கப்பட்டுள்ள போலீசாரிடம் விளக்கம் கேட்க்கப்பட்டதில், பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் மரித்தாஸ் தரப்பில் மாரிதாஸை கைது செய்ய தான் வீட்டை சுற்றி போலீசார் குவிக்கப்ட்டுள்ளதாக சந்தேகம் எழுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இந்நிலையில் மரித்தாஸ் வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளது குறித்து வெளியான தகவலின் படி.

கடந்த இரண்டு தினகளுக்கு முன் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறித்து எழுத்தாளர் மரித்தாஸ் வீடியோ ஓன்று வெளியிட்டிருந்தார். அதில் தற்பெருமை பேசி வரும் பழனிவேல் தியாகராஜன் தவறுகளை சுட்டி காட்டி, இதற்கு முன் இது போன்று தற்பெருமை பேசும் ஒரு அமைச்சர் இருந்ததில்லை, மேலும் தனது சொந்த கட்சியை சேர்ந்த மூத்த தலைவரை கூட அநாகரிகமாக விமர்சனம் செய்த பழனிவேல் தியாகராஜன் தவறை சுட்டி காட்டி பேசியிருந்தார் மரித்தாஸ்.

இந்நிலையில் பழனிவேல் தியாகராஜன் குறித்து வீடியோ வெளியிட்ட அடுத்த இரண்டு தினத்தில் மரித்தாஸ் வீட்டை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளது மாரிதாஸ் மற்றும் பொதுமக்கள் தரப்பில் அந்த வீடியோவுக்காக தான் மாரிதாஸ் கைது செய்யப்படலாம் என சந்தேகம் எழுந்துள்ளது, மேலும் நேற்று கூடலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் திமுக தரப்பில் 30 க்கு மேற்பட்டவர்கள் ஒன்றாக சேர்ந்து மாரிதாஸ் மீது புகார் கொடுத்துள்ளதாக திமுகவை சேர்ந்த ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.