எங்க வாழ்க்கையும் வாழை படம் மாதிரி தான்… கண் கலங்கிய தாய் மகன்… கடவுள் போன்று காட்சி அளித்த விஜய்…

0
Follow on Google News

சமீபத்தில் வெளியான வாழை படத்தில் இடம்பெற்றுள்ள கதையின் படியே பலரின் நிஜ வாழ்க்கையும் கண்கலங்க வைக்கும். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் நடந்த நீயா நானா நிகழ்ச்சியில் வேலை பார்த்துக் கொண்டே படிக்கும் மாணவர்கள் பல தாங்கள் படும் கஷ்டங்களை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் கோவில் பட்டியைச் சேர்ந்த ஒரு மாணவனும் அவருடைய தாயாரும் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

அதில் பேசிய அந்த மாணவன் படிப்பு முடிந்த பின்பு மாலை 5:30 மணிக்கு ஒரு பழக்கடையில் வேலை செய்வதாகவும், அந்த பழக்கடையில் இருந்து வாடிக்கையாளருக்கு தேவையான டெலிவரிகளை அனுப்புவது மூட்டைகளை தூக்குவது என இரவு 10 மணி வரை வேலை செய்வதாக தெரிவித்தவர். சில நேரங்களில் பேருந்தை இரவு மிஸ் செய்து விட்டால் வேலை முடித்துவிட்டு சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது வீட்டிற்கு நடந்தே செல்வதாகவும் தெரிவித்தார்.

மேலும் அப்படி அந்த மாணவன் நடந்து செல்லும் போது, தன்னுடைய குடும்பத்தை நன்றாக வைத்திருக்க வேண்டும், எலும்பு தேய்மானமாகி வீட்டின் தரையில் படுத்து இருக்கும் தன்னுடைய தாய்க்கு ஒரு மெத்தை வாங்கி தரவேண்டும் என்கிற சிந்தனை அவருக்கும் வரும் என அந்த பையன் பேசும்பொழுது, அதை பார்த்து அந்த தாய் கண் கலங்குவதை பார்க்கும் நமக்கும் கண் கலங்குகிறது.

இதனை தொடர்ந்து அந்த தாய் பேசுகையில் தாங்கள் எந்த ஒரு கஷ்டத்தையும் தங்கள் பிள்ளையிடம் காண்பித்துக் கொள்ள மாட்டோம், இருந்தாலும் அவன் எங்களுடைய கஷ்டத்தை புரிந்து கொள்ளுவான் எனக்கு எலும்பு தேய்மானம் ஏற்பட்டு விட்டதால் சில மாதங்களாக வேலைக்கு செல்ல முடியவில்லை, மேலும் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவனாகவே வேலைக்கு சென்று படித்துக் கொண்டிருக்கிறான் என்று அந்த தாய் கண் கலங்கி பேசுகையில் பார்ப்பவர்களுக்கும் கண்கலங்குகிறது.

உடனே அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத் இந்தப் பையன் முழுவதும் படிப்பில் கவனம் செலுத்தினால் இன்னும் நல்லா படிப்பாரே, படித்து முடித்த பின்பு நல்ல வேலைக்கு போகலாமே என்று சொல்லவும். அந்த தாயும் எங்களுக்கு என் பையன் வேலைக்கு போகணும் இல்ல ஆனா அவன் தான் குடும்ப சூழ்நிலை காரணமாக வேலை பார்க்கிறான் என்று சொல்கிறார்.

உடனே நிகழ்ச்சியின் தொகுப்பாளர் இனிமேல் நீ மூட்டையை தூக்கக்கூடாது. புத்தகத்தை தான் நீ கையில் எடுக்கணும் என்று சொல்கிறார். இந்த நிகழ்ச்சி வாழைப் படம் பார்த்தவர்களுக்கு எப்படி பேச முடியாத ஒரு சோகத்தை கொடுத்தது. அதைவிட பல மடங்கு சோகத்தை கொடுத்தது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி அடுத்த சில நிமிடங்களையே நடிகர் விஜய் உடனே அந்த அந்த மாணவனின் வீட்டிற்கு தேவையான ஒரு மாதத்திற்கான பல சரக்கு சாமான்.

அந்த தாய் எலும்பு தேய்மானம் ஏற்பட்ட தரையில் படுப்பது கஷ்டமாக இருக்கு என சொன்னதால் அவருக்கு மெத்தை மற்றும் அந்த மாணவன் மூன்று வருடம் கல்லூரி படிப்புக்கு தேவையான அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். அது மட்டும் இன்றி தற்பொழுது குடும்ப செலவுக்காக 25,000 ரூபாயையும் அந்த மாணவனின் தாய் அக்கவுண்டுக்கு சென்னையிலிருந்து விஜய் தன்னுடைய கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மூலம் அனுப்பி வைத்துள்ளார். அந்த வகையில் ஒரே நிமிடத்தில் அந்த தாயின் மகனின் வாழ்க்கையில் மிகப் பெரிய பிரகாசத்தை ஏற்படுத்து வகையில் கடவுள் போல் காட்சியளித்துள்ளார் நடிகர் விஜய்.