பாஜகவுடன் இணைந்து இறங்கி அடிக்கும் ஓபிஎஸ்.. காலியாகும் இபிஎஸ் கூடாரம்…

0
Follow on Google News

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இவர்கள் இருவருக்கும் இடையிலான பிரச்சனை உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவருக்கும் இடையிலான பிரச்சனையில் டெல்லி பாஜக யார் பக்கம் இருக்கின்றது என்கின்ற குழப்பம் அக்கட்சி தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் இதுவரை இருந்து வந்தது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலின் கூட்டணி பங்கேட்டில் பாஜகவிற்கு எதிர்பார்த்த தொகுதியை எடப்பாடி பழனிச்சாமி ஒதுக்கவில்லை. கடைசி வரை காக்க வைத்து பாஜகவை அலட்சியமாகத்தான் அவர் கையாண்டார். சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவி ஆட்சியை இழந்த பின்பு, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இருவருக்கும் இடையிலான பிரச்சனை உச்சகட்டத்தை எட்டியது.

இந்நிலையில் டெல்லி பாஜக தலைமை தனக்குத்தான் ஆதரவாக செயல்படுகிறது என்கின்ற ஒரு தோற்றத்தை, அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் ஓ பன்னீர்செல்வம் தரப்பும் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பும் செய்து வந்தனர். இதனால் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மிகப்பெரிய குழப்பத்தில் யார் பக்கம் செல்வது என்று இருந்து வந்தனர்.

இந்நிலையில், சமீபத்தில் பிரதமர் மோடி மதுரை விமான நிலையம் வந்தபோது எடப்பாடி பழனிச்சாமி பிரதமரை எதிர்க்கட்சித் தலைவர் என்கின்ற முறையில் தனியாக சந்திக்க நேரம் கேட்டு அதற்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. மேலும் அமைச்சர்களுடன் பத்தோடு பதினொன்றாக வரிசையில் நின்று பிரதமரை வரவேற்கும் வாய்ப்பு மட்டுமே எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைத்தது.

இதன் பின்பே அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி பாஜக டெல்லி தலைமையால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார் என்கின்ற ஒரு பேச்சு அதிமுக தலைவர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அதே நேரத்தில் சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித்சாவை எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க வாய்ப்பு கேட்டு, அதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

எடப்பாடியை நம்பி கடைசி நேரத்தில் ஒவ்வொரு முறையும் ஏமாறுவதற்கு பாஜக தயாராக இல்லை. இப்படியே சென்று கொண்டிருந்தால் பாஜகவை தமிழகத்தில் வளர்க்க முடியாது என்பதால் பாஜக கூட்டணியில் அனுசரணையாக இருக்கக்கூடிய ஓபிஎஸ்க்கு தங்களுடைய முழு ஆதரவை பாஜக டெல்லி தலைமை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதன் வெளிப்பாடுதான் சமீபத்தில் ஓ பன்னீர்செல்வம் நடத்திய அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என்கின்றனர். மேலும் அடுத்து ஓ பன்னீர்செல்வம் அதிமுகவின் செயற்குழு கூட்டத்தையும் கூட்ட இருப்பதாக தெரிவித்துள்ள நிலையில், அடுத்தடுத்து பன்னீர்செல்வம் இறங்கி அடிப்பதற்கு காரணம் அவர் பின்னணியில் டெல்லி பாஜக இருப்பதால் தான் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

எதிர்கட்சியாக இருக்கும் அதிமுக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு டெல்லி அதிகாரம் மிக முக்கியம் என்பதை உணர்ந்து, பாஜக யாருக்கு ஆதரவாக இருக்கிறதோ அந்த தலைவர் பின் அணிவகுக்க தயாராக இருந்து வந்தனர் அதிமுகவினர். இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு டெல்லி பாஜக தலைமையின் ஆதரவு இல்லை, ஓபிஎஸ்க்கு தான் ஆதரவு என்று தற்பொழுது வெட்ட வெளிச்சமாகி உள்ள நிலையில், எடப்பாடி கூடாரத்திலிருந்து பல அதிமுக முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஓபிஎஸ் பக்கம் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ச் விவகாரம் தலைக்கு மேல் போய் விட்டது… மருமகனை காப்பற்ற திமுக தலைமை