கேரளா : கேரள கவர்னர் ஆரிப் கான் இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாடு சனாதன தர்மத்தை ஒட்டியே உள்ளது என்ற கருத்திலும் ஹிந்துத்வம் மட்டுமே இந்தியாவின் கலாச்சாரத்தை மேம்படுத்தும் என்ற கொள்கையிலும் உறுதிப்பாடு உடையவர். சமீபத்தில் ஹிஜாப் சர்ச்சை எழுந்தபோது ஹிஜாப் அணிவது கட்டாயம் என இஸ்லாமிய கோட்பாடுகளில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என கூறியிருந்தார்.
இந்நிலையில் ஹிந்துக்கலாச்சாரத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்ட கேரள கவர்னர் இந்தியாவில் முறையான கல்வியை கற்றுக்கொடுப்பதன் மூலம் இந்தியாவின் கலாச்சாரத்தை மீட்டெடுக்கவும் சனாதன தர்மத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் குறித்தும் உரையாற்றினார். இது கம்யூனிஸ்டுகளிடையே சலசலப்பை உண்டுபண்ணியுள்ளது.
கேரள மாநிலம் கலான் நகரில் ஒரு பள்ளி திறப்பு விழாவில் பேசிய கவர்னர் “இந்தியாவின் பழைய கலாச்சாரத்தை புதுமைப்படுத்த அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். நாம் மீண்டும் பழமைக்கு திரும்பி செல்ல வேண்டும் என்பதற்காக அல்ல. ஆனால் சனாதன கொள்கைகளை மீண்டும் கொண்டுவரவேண்டும்.
மனித வாழ்வின் நோக்கம் அறிவை அடைவதே. பணிவு என்பது அறிவின் விளைவு என ஸ்வாமி விவேகானந்தர் கூறியுள்ளார். பணிவு உள்ள யாரையும் இழிவாக பார்க்க முடியாது. சனாதன கொள்கைகளே நமது வாழ்வை மேம்படுத்தும். கல்வியில்லாமல் எதுவும் சாத்தியமில்லை. நமது நாடு முன்னேற சனாதன கொள்கைகளை மீட்டெடுக்க வேண்டியது அவசியம்” என் கூறினார்.
நேற்று தனியார் பள்ளியை திறந்து வைத்த இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உமேஷ் பிரதாப் சிங் , காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆனந்த் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஹரிபிரகாஷ் வர்மா உள்ளிட்டோர் உடனிருந்தனர். கவர்னரின் இந்த கருத்துக்கு பதிலளித்த சிபிஐஎம் மாவட்ட தலைவர் “கவர்னர் ஹிந்துத்துவ கருத்துக்களை மாணவர்களிடம் வலிந்து திணிக்க முயல்கிறார். மாணவர்கள் எதை கற்க வேண்டும் என்பது மாணவர்களின் விருப்பம்” என கூறினார்.