ஏ.சி,பி அலுவகத்தில் சேரை திருடிய ஜப்பான்காரர்..! தண்டம் கட்டும் காவல்துறை..இந்தியாவில் எங்கே தெரியுமா.?

0
Follow on Google News

பெங்களுர் : இந்திய நீதிமன்றங்களின் தீர்ப்புகள் பல நீதியை நிலைநாட்டினாலும் சில தீர்ப்புகள் நகைச்சுவையான விமர்சனத்திற்கு ஆளாவது உண்டு. இந்த வகையில் நேற்று கொடுக்கப்பட்ட ஒரு தீர்ப்பு மக்கள் அனைவரையும் ஆச்சர்யத்திற்குள்ளாகியிருக்கிறது.

ஜப்பான் நாட்டை சேர்ந்தவர் தனகா. இவர் ஆங்கிலப்புலமை பெறவேண்டி கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு 2019ல் வந்தார். அப்போது அவர் மீது பொய்வழக்கு போடப்பட்டதாக தெரிகிறது. அதன்பின்னர் நடந்த சட்டப்போராட்டங்களில் தனகா மீது போடப்பட்ட எப்.ஐ.ஆரை ரத்துசெய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து 2020 டிசம்பரில் KSHRC ல் ஒரு புகாரளித்தார்.

ஆர்டி நகர் காவல்துறை துணை ஆய்வாளர் ஹனுமந்தராயப்பா கைது நடவடிக்கையின்போது உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லையென்றும் தன்மீது மிருகத்தனமாக நடந்துகொண்டார் என்றும் வன்முறையை பிரயோகப்படுத்தினார் என்றும் புகாரளித்தார். இதனிடையே தனகா புகார் அளித்த சிலநாட்களிலேயே அவரது விசா காலாவதியானது.

வழக்கு நடைபெறுவதால் அவரை நாடு கடத்த காவல்துறை ஆயத்தமானது. இந்நிலையில் 2021 மார்ச் மாதம் ஜேசி நகர் ஏ.சி.பி அலுவலகத்திற்கு சென்ற தனகா அங்கிருந்த நாற்காலி ஒன்றை தனது வீட்டிற்கு எடுத்துச்சென்றுள்ளார். அதை புகைப்படமும் எடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து தனகா மீது வழக்கு பதியப்பட்டது. இதனால் மீண்டும் இந்தியாவிலேயே தங்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

இருந்தபோதிலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தனகா நாடுகடத்தபட்டார். காவல் துணை ஆய்வாளர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் நேற்று KSHRCதீர்ப்பளித்துள்ளது. நீதிபதி டி.ஹெச். வஹேலா ” வெளிநாட்டு குடிமக்கள் மற்றும் படிப்பறிவில்லாதவர்கள் தொடர்புடைய வழக்குகளை கையாள காவல்துறையினருக்கு தகுந்த வழிகாட்டுதல்கள் வழங்கப்படவேண்டும்.

மாநில அரசு ஒழுங்கு நடவடிக்கை மற்றும் இழப்பீடு மூலம் PSIஇடம் இருந்து இழப்பீடு பெறவேண்டும். மனுதாரரை கைதுசெய்ய நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில் அவரை கைதுசெய்தது சட்டத்திற்கு புறம்பானது.சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் வேண்டிய ஹனுமந்தாரய்யா மனித உரிமைகளை மீறியுள்ளார். எனவே மனுதாரருக்கு இழப்பீடாக 75000 ஹனுமந்தாரய்யா வழங்கவேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் காவல்துறை அலுவலக நாற்காலியை தனகா எடுத்துச்சென்றது குறித்து காவல்துறை எந்தவொரு வழக்கும் பதியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.