இஸ்ரேலில் அடுத்த மாதம் நடக்க உள்ள உலக அழகிப் போட்டி திட்டமிட்ட படி நடக்கும் என அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் நடக்க பிரபஞ்ச அழகி போட்டி இந்த ஆண்டு இஸ்ரேலில் நடக்க உள்ளது. டிசம்பர் 12 ஆம் தேதி இந்த போட்டி நடக்க இருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டினர் தங்கள் நாட்டுக்குள் வருவதற்கு இஸ்ரேல் அரசு பல கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது.
அதனால் திட்டமிட்டப்படி உலக அழகி போட்டி நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. அதுகுறித்து இப்போது அந்த நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் யோயல் ரஸ்வோஸவ் அளித்துள்ள விளக்கத்தில் ‘திட்டமிட்ட படி உலக அழகி போட்டி நடக்கும். ஏனென்றால் அது எங்களுக்கு முக்கியமான ஒன்றாகும்.
போட்டியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு 48 மணிநேரத்துக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.’ எனக் கூறியுள்ளார்.