நீரிழிவு இந்தியாவையே அச்சுறுத்தும் ஒரு நோய் நிலையாக மாறியிருக்கிறது. வளர்சிதை மாற்றக் கோளாறுகளில் ஒன்றான நீரிழிவு பாதிப்பில் உலகிலேயே இந்தியா தான் முதன்மை வகிக்கிறது. இதற்கு முக்கியக் காரணமே நம்முடைய மாறிவிட்ட வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம், உடற்பயிற்சி இன்மை போன்றவை தான். இவற்றை முறைப்படுத்தினாலே நீரிழிவைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும். சர்க்கரை நோயாளிகள் உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிப்பதும் உடலை சுறுசுறுப்பாக வைத்திருப்பதும் அவசியம்.
குளிர்காலத்தில் வெப்பநிலை வீழ்ச்சி நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளை அதிகரிக்கிறது. நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் குறிப்பிட்ட சில பொருட்களை சேர்த்துக்கொள்ள நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். இதனால் உடலில் ஏற்படும் திடீர் மாற்றங்களைத் தவிர்க்கலாம். நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த நீரிழிவு நோய்க்கு உகந்த உணவை உட்கொள்ள வேண்டும்.
நீரிழிவு நோயாளிகள் எல்லா வகையான கீரைகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இவற்றில் அதிகப்படியான அளவு இரும்புச்சத்து இருப்பதோடு நார்ச்சத்துக்களும் போதுமான அளவில் இருப்பதால் இவற்றின் கிளைசெமிக் குறியீடு மிகக் குறைவு. இது ரத்தத்தின் சர்க்கரையின் அளவை வேகமாக உயர்த்தாது. இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயாளிகளை பல நோய்களிலிருந்து பாதுகாக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டியது மிக அவசியமாகும்.
வெந்தயக்கீரை குளிர்காலத்தில் அதிகம் கிடைக்கும் கீரை வகையாகும். இதை உட்கொள்வது நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருப்பதோடு உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். வெந்தயம் கசந்தாலும், அவ்வளவு நன்மைகளை அடக்கியுள்ளது. இதில் கால்சியம், செலினியம், மாங்கனீஸ், மக்னீசியம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவை நிறைந்துள்ளன. வயிற்றுப்போக்கு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களிலிருந்து விடுபட வேண்டுமெனில் இதை சாப்பிட மருத்துவர் அறிவுறுத்துகின்றனர்.
வெந்தயம் நீரிழிவு நோயாளிகளுக்காகவே படைக்கப்பட்ட அமிர்தம் என்று கூட சொல்லலாம். நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் மிகவும் சிரமப்படடு வெந்தய விதைகளைச் சாப்பிடுவார்கள். ஆனால் வெந்தயக் கீரையை நாம் கண்டுகொள்வதே கிடையாது. வெந்தயக் கீரை ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் கொண்டு வர மிகச்சிறப்பாக வேலை செய்யும். இரும்புச்சத்தும் அதிகம். அதனால் 40நாட்களாவது வெந்தயக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
வெந்தயக் கீரை ஒரு சிறந்த குளிர்கால உணவாகும். இதை நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் சேர்க்கலாம். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வெந்தயக்கீரையில் நீரிழிவு நோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதை உட்கொள்வது இன்சுலினின் இயற்கையான உற்பத்திக்கு வழிவகுக்கிறது. இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது. வெந்தய கீரைகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க சிறந்த உணவாகும். நீரிழிவு நோயாளிகள் வெந்தயக்கீரையை கறியாக அல்லது கடைந்து கூட்டாக சாப்பிடலாம்.
வெந்தயக்கீரையை உட்கொள்வதால் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இதனை உட்கொள்வதால் கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுக்குள் இருப்பதோடு நல்ல கொலஸ்ட்ராலையும் இது அதிகரிக்கிறது. வெந்தயத்தில் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் ஸ்டீராய்டல் சபோனின் என்ற கூறு உள்ளது. வெந்தய கீரையை உட்கொள்வதால் செரிமானம் மேம்படும். நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்த வெந்தய கீரைகள் செரிமானத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.
நார்ச்சத்து மற்றும் பெக்டின் அடங்கிய வெந்தயக்கீரை மலத்தை தளர்த்தி மலச்சிக்கலை போக்குகிறது. இதை சாப்பிடுவதால் செரிமானம் மேம்படும். எடையைக் கட்டுப்படுத்த, வெந்தய கீரையை தினசரி உணவில் உட்கொள்ள வேண்டும். பச்சை வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாகவும் கலோரிகள் மிகவும் குறைவாகவும் உள்ளன. இது உடல் பருமனை குறைக்க உதவுகிறது. வெந்தயக்கீரையை சர்க்கரை நோயாளிகள் பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தி வருகின்றனர். வெந்தயம் நீரிழிவு நோய்க்கு மிக மோசமான எதிரி என்றே சொல்லலாம். இதன் பயன்பாடு சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.